எனக்கு வேற பேரு வைங்க மாமா

மாமோய் நம்ம ஏரி கரை பூங்காவுக்கு வர்றவங்க பேரை எல்லாம்ப கேட்டா ஆச்சரியப்படுவீங்க. எனக்கும் ஒரு நல்ல பேரா மாத்தி வைங்க மாமா.

#@###
என்னன்னு சொல்லித் தொலைடி வெள்ளச்சி. நீ வெள்ளையாய்தானே;
வெள்ளிச்சிதானே உம் பேரு. உனக்கு அந்தப் பேரேபொதுண்டி.
@###@#
இல்லீங்க மாமா தமிழருங்க எல்லாம் இப்ப இந்திப் பேருங்களத்தாம் வச்சுக்கறாங் க. நீங்களும் உங்க மனசுக்குப் பிடிச்ச எதாவது ஒரு இந்திப் பேரா எனக்கு வையுங்க மாமோய்.
@@####
இங்க எத்தனயோ குடும்பங்க புள்ள குட்டியோட இந்த ஏரில படகு விடறதுக்கும், நம்மளப் போன்ற பறவைகளப் பாக்கறதுக்கும் வர்றாங்க. இங்க வர்ற சிறுமிகள்ல ஒரு நாளைக்கு ஒருத்தியாவது ஸ்வேதா-ங்கற பேரு உடையவளா இருக்கறா. அப்பறம் பெரியவங்க சிலர் பேசிட்டு இருந்ததும் எங் காதுல விழுந்துச்சு. ஸ்வேதா-ன்னா வெள்ளச்சி-ன்னு அர்த்தமாம்.
@@@@@@@
அய். ஸ்வேதா-ன்னா வெள்ளச்சி-ன்னு அர்த்தமா? மாமோய் இனிமே என்ன வெள்ளச்சி -ன்னு கூப்படமா ஸ்வேதா-ன்னே கூப்பிடுங்க மாமோய்.
@@#####
சரிடி வெள்ளச்சி ஸ்வேதா.
###
என்னங்க மாமா மறுபடியும் வெள்ளச்சின்னு கூப்படறீங்க. போங்க மாமாஂ
#####
மன்னிச்சுக்கடி ஸ்வேதா.
######
இப்பத்தான் நீங்க எஞ் செல்ல மாமா.
#####
சரி, சரி. நீ என்னக் கொஞ்சினது போதும். அஙக ஒரு பெரிய மீனா வருது. குறி தவறாம அதைக் கொத்திப் பிடீடி ஸ்வேதா.
@@@@@@@@@@@@@@@@@@@@

திரைவழி வரும் இந்திப் பெயர் மோகம்
பறவைகளையும் விட்டு வைக்காது போலும்.
.

எழுதியவர் : மலர் (8-Oct-16, 7:21 am)
பார்வை : 247

மேலே