அக்கா

"அவிங்க கெடக்காய்ங்க விடுங்க அக்கா..
எங்க ஊர்ல ஒரு அக்கா ஆட்டோ ஓட்டுது,
ஒரு அக்கா பஸ் ஓட்டுது..
இன்னொரு அக்கா லாரி ஓட்டுது..
அந்த பக்கம் இன்னொரு அக்கா
கையில விளக்கமாத்த எடுத்துகிட்டு
அவங்க வீட்டுக்காரர விரட்டுது..
அதுவும் என்னச்செய்யும்.. வேலைக்கும் போயிட்டு ,
அவரு தெனமும் தண்ணியடிக் காசு கொடுத்து கவனிச்சிகிட்டு.. குடும்பத்தையும் பாத்துகிட்டு, புள்ளைங்களையும் படிக்க வச்சிகிட்டு இப்படி
இன்னும் சொல்லிகிட்டே போகலாம்..
இப்படியும் வாழ்க்கையை நகர்த்துறவங்க இருக்காங்க அக்கா..
அத விட்டுட்டு அவிங்க அப்படி சொல்வாய்ங்களோ, இவிங்க இப்படி சொல்வாய்ங்களோனு நினைக்காதிங்க..
அவனவனுக்கு அவிங்க பிரச்சனைகள பாக்குறதுக்கே நேரஞ்சரியா இருக்கு..
அதெல்லாம் பார்த்தா முடியாதுங்க அக்கா.. நாம திருடக்கூடாது, தப்பான வழியில போகக்கூடாது அவ்வளவு தான்.. நல்லபடியா சம்பாதிக்க எத்தனையோ வழியிருக்குங்க அக்கா..
அத விட்டுட்டு தற்கொல செஞ்சிக்க கடலுக்கு வந்துறுக்குறது சரியில்லக்கா..
எனக்கு தெரிஞ்ச அக்கா சாப்பட்டுக்கடை வச்சிறுக்கு.. வாங்க நான் அவங்ககிட்ட சொல்லி சேத்துவிடுறேன்" என்றபடி தன் சுண்டல் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு நகர்ந்த அச்சிறுவனின் பின்னால் நடந்தாள் சுந்தரி..
அவள் கண்களில் கண்ணீர் மறைந்து
நம்பிக்கை ஒளி தெரிந்தது..

விஜயகுமார் வேல்முருகன்

எழுதியவர் : விஜயகுமார் வேல்முருகன் (8-Oct-16, 2:30 pm)
Tanglish : akkaa
பார்வை : 266

மேலே