ஒரே ஒரு சிங்கத்தையும் ஒரே ஒரு இளவரசரையும் பாக்கப் போறேன்

என்னடா சொல்ற நட்ராஜ்? யாரு அந்த இளவரசர்? நம்ம ஊரில இளவரசர் யாரும் இல்லையே? இங்க சிங்கம் எப்பிடிடா வந்தது?
###@@
டேய் தங்ராஜ் , என்ன நட்ராஜ்-ன்னு இனிமே கூப்பிடாத. நாம ரண்டு பேரும் பதவி உயர்வு கெடச்சு வட மாநிலதுக்கு போனதுக்கப்பறம் இந்திக்காரங்க நம்ம பேருங்களத் தப்பா உச்சரிச்சாங்க. நா அவுங்களுக்காக நடராஜன்-ங்கற எம் பேர நட்ராஜ்-ன்னு மாத்திட்டேன். நீ தங்கரஜு-ங்கற பேர தங்ராஜ்-ன்னு மாத்திட்டே. இங்க வந்ததுக்கப்பறம் எங்க வீட்டுல என்ன கண்டபடி திட்டி பழையபடி எம் பேர நடராஜன்-ன்னே மாத்தணும்ன்னு சண்டை போடறாங்கடா தங்ராஜ்.
#####
அட, போட நட்ராஜ். எங்க வீட்டிலயும் அதே கதைதாண்டா. சரிடா பெத்தவங்க வச்ச பேர மாத்தினது ரொம்ப தப்புடா.
@###@
சரி, நீ என்னவோ சிங்கம், இளவரசர்-ன்னு சொன்னயே அது என்னடா?
@@@@#
நாம பீகார்ல வேல பாத்தபோது நம்ம வங்கிநம்மகூட இளவரசர்ன்னு யாரும் வேல பாக்கலையே? சிங்கமும் நாம வேல பாத்த ஊரில இல்லையே? என்னடா கிண்டல் பண்ணறயா?
@@@@@
இல்லடா. நம்மகூட வேல பாத்த கேவல் சிங்-கும் கேவல் குமாரும் சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்காங்கடா. ஓ.... அதத்தான் சிங்கம் இளவரசர்-ன்னு சொன்னயா?
@@@@
ஆமாண்டா
@########@@@@@@@@@@@@@@@@
கேவல் = ஒரே ஒரு, மட்டும், ஆயினும்.
சிங் = சிங்கம்
குமார் = பையன், மகன், இளவரசன்

எழுதியவர் : மலர் (8-Oct-16, 11:45 pm)
பார்வை : 267

மேலே