இடையில் ஓடும் நதி
கனவுகள் வாழும் இரவில்,
கண்ணீர்துளிகளின் மரணம்...
நினைவு செல்லும் பாதையில்...
கடக்க முடியாத சில,
கண்ணீர் குட்டைகள்...
கூட்டத்தில் நாணம் கொண்டு,
புன்னகையினுள் புதையுண்ட சோகம்...
தனிமையில் துளிர்விடுதே...
இரவின் எல்லை வரை பாயுதே,
இமைகளின், இடையில் ஓடும் நதி...