பற்றும் வரவும் - 1 எழுத்தும் எண்ணமும் - ஆடிட்டர் செல்வமணி

நாம் எல்லோரும் வாழும் இந்த சமூகம் மிகவும் கொடுமையானது. வாழத்தெரிவதில்லை என்று ஒவ்வொருவருக்கும் அவரைச்சார்ந்தவர் எவரேனும் சொல்லாமல் இருக்க முடியுமா?

பணம் மட்டும் இருந்தால் போதும் என்று நினைக்கும் எத்தனை பேருக்கு சந்தோசமும் நிம்மதியும் கிடைத்து விடுகிறது, தினமும் எப்பொழுதும்.

எல்லா நேரங்களும் சந்தோசமாகவே இருந்து விட்டால் வாழ்க்கை அலுத்து விடும் என்றும் சிலருக்கு எண்ணம்.

பணம் யாருக்கு போதுமான அளவுக்கு இருக்கிறதோ அவர்களின் மன வலிமையைப்பொருத்தது அவர்களின் உற்சாக வாழ்க்கை.

எதையும் எதிர்பார்க்காமல் எல்லோரும் வாழ்ந்து விட்டால் ஆசைப்படாமல் பாவம் செய்யாமல் வாழ்ந்தால் முக்தி அடையலாம் பிணி ஏதுமின்றி - என்றார் கௌதம புத்தர்.

வாழ்க்கை என்னும் வடிவம் அப்படி ஸ்ருஷ்டிக்கப்பட்டது அல்லவே!

இங்கே வாழும் மனிதர்கள் நாம் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது இன்று புதிதாக இங்கே பதியப்படுகிறது -
அதுவும் வாழ்க்கைக்கு தேவையான சித்தானந்தம் தான்!

ஒவ்வொரு ருபாயும் மதிப்பு மிக்கது மட்டுமல்ல, அந்த ஒவ்வொரு ரூபாயும் இன்னொரு ரூபாயை ஈட்ட முடிந்தால் தான் அதற்கு இன்னும் மதிப்பு கூடும்.

கல்வி பயன்பாடு அடைய அடைய வளரும் என்றார் ஆன்றோர் அன்று, பணம் அப்படியல்ல தீரும் என்றும் தானே சொன்னார்கள்.

அப்படி இனிமேல் இருக்க கூடாது, பணம் பணத்தை பெருக்க வேண்டும், இங்கே எல்லோருக்கும்.

வெறும் அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் மட்டும்
தான் அதிர்ஷ்டம் இருக்க வேண்டுமா, ஏன் உங்களுக்கு இருக்க முடியாதா?

நாம் செலவழிக்கத்தான் பிறந்தோமா, பொருளீட்டுவது சில 'பெரிய' தலைகளால் தான் முடியுமா?

நம்மால் எப்பொழுது நம் கையில் இருக்கும் பணத்தை வைத்து நேர்மையான வழியில் இந்த சமூகத்திற்கு பயன்படும் இன்னொரு பொருளை உற்பத்தி செய்ய முடியுமோ அந்த உற்பத்தியினால் நம் கையில் இருக்கும் பணம் இன்னும் மதிப்பை அதிகம் பெற முடியுமோ அப்பொழுது தான் அந்த பணத்துக்கும் அந்த பணத்தை கையாளும் நமக்கும் பெருமை - அந்த உழைப்புக்கும் கௌரவம்.

அந்த கௌரவம் தான் இந்த உலகில் உன்னதமானது.
உயர்வானது, உண்மையானது...

(தொடரும்)

எழுதியவர் : செல்வமணி (9-Oct-16, 12:37 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 127

மேலே