மதுரை தேர் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

தேரிலே கச்சிதமும், திவ்யமுமாய் உட்கார்ந்த
பாரோர் புகழும் விநாயகனை - நேரிலே
பார்த்தே னவனழகை; என்ன பகர்வேனே!
பார்வேந்தன் தாளைத் தொழு! 1

உமையவள் மைந்தனாம் உன்னதத் தேரில்
அமைதி விநாயகன் அங்கே - இமையோர்
வணங்கவே எங்களை வாழ்விக்க எண்ணி
சுணங்காது வந்திடுவான் இங்கு! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Oct-16, 10:49 am)
பார்வை : 42

மேலே