தவம்

வறண்ட நதி போல்
மறையும் பரிதியின்
விரித்த கையிலிருந்து
விரைகிறது இரவு.

மனசு கீறி
புருவ நிழலில்
தணல் நிறத்தில்
ஒரு பூவின் சிரிப்பு.

நிச்சலனமாய்
யாவும் உருகிட...
வாழ்வு
பேசாத வேளையாகி
காலம் பனிக்கிறது.

எண்ண வலைகளோ
நுகரும் புலன்களற்று
சமைகிறது
நட்சத்திரங்களாய்.

ஆபாசமான என் வியப்புகள்
தன் விடாய் தீர்ந்து
காலம் திருகிப் படிகின்றன
படிமங்களாய்.

சீர்குலைந்த
என் உள் வானில்
சிறகு மடித்து
இசைவிரிக்கிறது
பேரணுவின் சலனம்.

மந்தகதியில்...

மனக்கரையில்
ஒளியின் பேராழத்திலிருந்து
விரிகிறது.....

ஒரு தொடுவானம்.

எழுதியவர் : rameshalam (11-Oct-16, 12:12 pm)
Tanglish : thavam
பார்வை : 78

மேலே