இந்த காதல் போதாது

வெறும்
புனைவு அல்ல
உன்னை பற்றியது
எல்லாமே
புதினம்..

***

ஏனோ
வெறுமைக்கு
என்னை பிடித்திருக்கிறது..
உன்னை எனக்கு
பிடித்திருப்பதை போல்..

***

என் ஆன்மாவை
பிழிந்தெடுத்த
காதல் செரூபம் நீ..

***

முன்புக்கு முன்பு
நீ எப்படி இருந்தாயோ..
பின்புக்கு பின்பு
நீ எப்படி இருப்பாயோ..
அன்புக்கு அன்பாய்
இப்போது இருக்கிறாய்..

***

உன் காதலை
சொல்லித் தீர்க்க
இந்த காதல் போதாது..

***

நாட்களை இயல்பாக
கடத்திவிடுவேன்..
உன் காதலை
என்ன செய்வது..

***

வார்த்தைகளை
பிடுங்கிவிட்டு
மொழிகளை
திணிக்கிறாய்
ஒரே பார்வையில்..

***

ஒரு சொல்
அதை
நீ சொல்
அதுவாகும்
என் காதல்
கஜல்..

***

- கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (11-Oct-16, 8:35 pm)
பார்வை : 114

மேலே