பசிதம்பரத்தின் பக்குவமற்ற வார்த்தைகளும்… அணுகுமுறைகளும்

”இந்திய இராணுவம் பாகிஸ்தானின் எல்லை தாண்டி ஊடுருவியது. தாக்கியது. “ என்றெல்லாம் சில அரைவேக்காடுகள் கூறுகின்றன. சில பத்திரிக்கைகள் கூட எழுதுகின்றன. உண்மை நிலை என்ன? உண்மையில் இந்திய இராணுவம் ஊடுருவவேயில்லை. காரணம், நமது தேசத்தில் 1948 ல் பாக்.தீவீரவாதிகளை ஊடுருவச்செய்து, தானும் தாக்கிய பாக்.இராணுவம், நேருவின் எண்ணப்படி ஐ.நா.சபை தலையீட்டால், அச்சமயத்தில் தாங்கள் நிலைகொண்டிருந்த இடத்திலேயே இருநாட்டு இராணுவங்களும் தடுக்கப்பட்டன. ஆக, பாகிஸ்தான் ஆக்கிரமித்தபூமியில் இப்போது பாகிஸ்தானின் தீவீரவாதக்குழுக்களின் முகாம்கள் இருக்கின்றன. இது எப்படி பாகிஸ்தானைத் தாக்கியதாகும்?
அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் சமாதானப்புறா பறக்கவிட்டதற்காக, இன்றும் நமது தேசத்தில், எத்தனை எத்தனை இராணுவத்தினர் உயிரிழக்கின்றனர்? இராணுவத்தினரின் தாய், தந்தையர், அவர்களின் மனைவியர், குழந்தைகள் தவிக்கின்றனர். இருதேசத்திற்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத சண்டைகளால், எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்? எவ்வளவு பொருள் இழப்பு? இதற்கெல்லாம் என்ன தீர்வு என கிஞ்சிற்றும் யோசிக்காமல், தேசத்தின் மானத்தை காக்கப்போராடும், எல்லையைக்காக்கப் போராடும் இராணுவத்தை, அதன் நியாயமான நடவடிக்கையை கொச்சைப்படுத்தும் நோக்கில் , சிலர் விமர்சிக்கிறார்கள். கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசாங்கம், டெல்லியில் ஆம் ஆத்மி அரசாங்கம் ஆகியவைகூட இராணுவத்தைக் குறைகூறவில்லை. இதற்கான ஒப்புதல் அளித்த மத்திய அரசை குறைக்கூறவில்லை. மாறாக தங்கள் ஆதரவைத்தெரிவித்து சட்டமன்றங்களில் பாராட்டுத்தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித்தந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நாங்களே எனக்கூறிக்கொள்ளும் இந்திரா காங்கிரஸ், மத்திய அரசைக் குறைகூறுகிறது. இராணுவத்தின் செயல்களைப் பற்றி விளக்கமும் ஆதாரமும் கேட்கிறது. முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் வீடியோ ஆதாரம் கேட்கிறார். அவருக்கு சில கேள்விகள்: இராணுவத்தைக் கொச்சைப்படுத்தும் இதைவிட கேடுகெட்ட செயல் ஏதாவது இருக்குமா? நிதி மற்றும் உள்துறை அமைச்சராக இப்படிப்பட்ட நபர்கள் மத்தியில் இருந்ததால்தானே பாகிஸ்தான் அட்டூழியம் கட்டுக்கடங்காமல் போனது?
இதுபோன்ற பேச்செல்லாம் நம் இராணுவத்தின் பலத்தைக் குறைப்பதுவும், அவர்களை மன்ச்சோர்வுகொள்ளச் செய்வதுமாகும். இவர்கள் சேவகர்களாக இருந்தால்தானே நமது சேனைகளின் மகத்துவம் புரியும். அரசர்களாகவே தங்களை அடையாளப்படுத்தி வாழ்பவர்களுக்கு எப்படி தீரர்கள் தியாகம் புரியும்?
இஸ்லாமிய பயங்கரவாதம் ஊடுருவியது மட்டுமல்லாமல், அவர்கள் வீட்டுக்குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே இந்துக்களுக்கு எதிரானவர்களாகவும், இந்த தேசத்திற்கு எதிராகவும் மூளச்சலவை செய்யும் வேலையைத்தொடங்கிவிடுகிறார்களே… இதற்கெல்லாம் இவர் உள்துறை மந்திரியாக இருந்தபோது என்ன நடவடிக்கை எடுத்தார்?
தொண்டு நிறுவனங்கள் என்கிற பெயரில், மதப்பிரசங்கமும், மதமாற்றங்களும் நிகழ்கின்றதே… இதற்கு வழியமைத்தது காங்கிரஸ்தானே?
மேற்குவங்கத்தில் நடைபெற்ற “சாரதா சிட்பண்ட் வழக்கு” இவர்களது காலத்தில்தானே நடைபெற்றது? இவர் மனைவியும் பலன்பெற்றததாக பத்திரிக்கைகளில் செய்திவந்ததே ! இதற்கு இவரது பதிலென்ன?
ஏழைஎளிய மக்கள் தெருவோரம் காய்கறிவிற்க லோன்தராத தேசிய வங்கிகள், கல்விக்கடனை எளிதான வகையில் பகிராத தேசிய வங்கிகள் சாராயம் காய்ச்சி விற்கும் விஜய் மல்லையாவிற்கு பல்லாயிரம் கோடிகளை அனைத்து வங்கிகளும் அள்ளிக்கொடுத்ததே, அதற்கு, இவர் ஆதரவு இல்லாமல்தான் நடந்ததா?
காங்கிரஸ் அரசு இருக்கும்போது, அதிலும் இவர் மத்திய அமைச்சராக இருந்தபோது, பாதுகாப்புப் படையினருக்கு வழங்க வாங்கிய கவச உடையை தரக்குறைவாக வாங்கி, அதில் கூட ஊழல் புரிந்ததும், அதனால் மும்பைத்தாக்குதலின்போது பல வீரர்கள் உயிரிழந்ததும் உண்மைதானே?
வரிவிதிப்பில் முறையற்றத் திட்டங்களைக் கையாண்டதால், இந்தியப் பொருளாதாரம் நிலையற்றத் தன்மையுடன் அல்லாடி அன்னியச் செலவாணிப் பற்றாக்குறையால் அவதிப்பட்டதுவே… அதற்கு என்ன பதில்?
ஒருகாலத்தில் நீங்கள் மத்தியில் அங்கம் வகித்தபோது “இந்தியன் வங்கி” திவாலானதே… அதற்கு என்ன பதில்?
அந்நிய நாடுகளில் தங்கள் குடும்பம் சொத்துக்குவித்து வைத்துள்ளதாக செய்திகள் உலவுகிறதே… இதற்கான பதில்?
இதுமட்டுமல்ல… இன்று பாரதீய ஜனதாவின் திரு. நரேந்திரமோடி அரசாங்கம் ஆளுமைத்தன்மையுடன், ஆணித்தரமான, உறுதியான முடிவுகளை எடுத்து பாரதத்தின் மானத்தையும், பெருமையையும் காப்பாற்றி, பொருளாதாரம், வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றில் இதுவரை யாரும் செய்யமுடியாத சாதனைகளை செய்துவருவது பொறுக்காமல், திரு. நரேந்திரமோடி அரசுடன் மோதுவதாகவும், அதன் செயல்பாடுகளை விமர்சிப்பதாகவும் எண்ணி , இந்திய இராணுவத்தின் நடவடிக்கையை குறைகூறுவது, அதற்கு வீடியோ ஆதாரம் கேட்பது எந்தவகையில் நியாயம்?
ஆப்கானிஸ்தான் அமைச்சர்கள், வெளியுறவுத்தூதரக அதிகாரிகள் , இன்னும் பிறநாட்டு தலைவர்களும்கூட இந்திய அரசின் , இராணுவத்தின் நடவடிக்கையை ஆதரிக்கும்போது உங்களுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை?
பொழுதுபோகாமல் பிதற்றக்கூடிய, எவ்வித பொதுஞானமும் இல்லாத சாதாரண ஒருவர் பேசுவதுபோல் பேசுவது நியாயமா? உங்களைப்போன்றோர் இவ்வாறு நடந்துகொள்வது எதிரிகளுக்கு சாதக அம்சங்களை உருவாக்கிவிடாதா? சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவு ஏற்படாதா?
ஒருவேளை நீங்கள் சார்ந்திருக்கும் கட்சி உண்மையிலேயே “இந்திய தேசிய காங்கிரஸாக” இருந்திருப்பின், உங்கள் வார்த்தைகள் சம்யோசிதமாக இருந்திருக்கும். ஆனால், நீங்களோ “இந்திரா காங்கிரஸ்” கட்சியினைச் சேர்ந்தவராயிற்றே… பிறகெப்படி உங்களிடம் அப்பழுக்கற்ற தேசபக்தியை எதிர்பார்க்கமுடியும்?
இது தன்னைப்பெற்ற தாயையும், தனக்கு விசுவாசமாக உள்ள மனைவியையும் கற்புவிஷயத்தில் ஒருவன் சந்தேகப்படுவதற்கு நிகரில்லையா? ஆகவே இராணுவத்தை கொச்சைபடுத்தாதீர்கள்.
எது எப்படியாயினும், திரு.நரேந்திரமோடி அரசு புடம் போட்ட தங்கமாய் ஜொலிக்கிறது… ஜொலிக்கும்… ஜொலித்துக் கொண்டேயிருக்கும்….

எழுதியவர் : (17-Oct-16, 9:02 am)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 166

மேலே