தனலெட்சுமி

மாலை நேரம் இது ...
வடக்கு பாலத்தில் அமர்ந்து ...
கருமை நிற உடையுடுத்தி ...
காத்திருக்கும் கண்களுக்கு பூத்திருக்கும்
உனது புன்னகையில்
மெய் சிலிர்க்க வைக்க
வந்து கொண்டு இருக்கிறாள் ...
எள்ளு நிற பொட்டு வைத்த
என்னவள் வருகிறாள் ...
சந்தனம் பூசிய மேனியில்
சஞ்சலம் இன்றி
சலங்கை ஒலி இசைக்க
என்னை சந்திக்க வருகிறாள் ...
ரோஜாவின் இதழ்களை கொண்ட
என்னவளின் துப்பட்டா ...
தென்றலில் தவழ்ந்து வருகிறது ...
சிறு மழலைப் போல ...
மழலை பேசுவாளோ ...
என் மனதை வாட்டுவாளோ ...
- D S Pr ...