நீயின்றி நானா

பாலும் தேனும் நீயோ! - உன்
தேகம் என்ன தீயோ!
காலம் யாவும் உன்னில்
கண்மையாய் கரைவேன் கண்ணில்...!

கானல் நீராய் நம் காதல்.!
கரைந்தா போகும் எம் தேடல்.!
முள்ளோ மலரோ உன் கண்கள்..!
காயம் மறையும் நீ பார்த்தால்...!

உன்னோடு வாழாத வாழ்வும்!
இசையோடு சேராத பாட்டும்!
ஏனோ வீணாய் போகும்!
நீயின்றி மண்ணில் தேகம்...!

ஏனோ ஏனோ என்னில்
ஆசை ஆறாய் ஓடுது நெஞ்சில்
காமம் நம்மில் இல்லை ! - உன்னை
கண்டால் பூக்கும் முல்லை...!

நீயின்றி எனக்கேது வாழ்வு
நீ நீங்கினால் நெருங்குது நோவு
தூங்கமல் விழிக்கும் கண்கள்! - நீ
தூக்கத்தில் நான் பாடும் பாடல்..!

காலம் ஓடுது உன் நினைவில்!
என் வாழ்வும் செழிக்குது கனவில்!
ஆற்றில் மிதக்கும் தோணி ! - என்னை
இயக்க ஆளில்லை கொஞ்சம் கவனி..!

பகலாய் தோன்றும் இரவும்!
சூடாய் எரியும் நிலவும்!
கசப்பாய் கசக்கும் கனியும்!
நான் இன்றி வாழ்வாயோ நீயும்.!

நீயின்றி வாழும் வாழ்வும்!
நிக்காமல் ஓடும் ஆறும்!
கடலினில் ஓர்நாள் கலக்கும்!
உப்பாய் வாழ்வும் உவர்க்கும்...!

கி வீரமணி
வயலூர்
விருத்தாசலம்...

எழுதியவர் : வீரமணி கி (18-Oct-16, 3:57 am)
Tanglish : neeyindri NANA
பார்வை : 307

மேலே