அதோ அத்தான் வந்து விட்டார்

அதோ.!
அத்தான் வந்து விட்டார்!
+++-++-------+++++++------++++
அதோ.!
அத்தான் வந்து விட்டார்
அகம் மகிழ்ந்து ஓடினேன்
குலவும் முகம் நாடி
குவியும் இதழ் தேடி
குதித்தது என் மனம்!
நலம் நாடும் உணர்வு
நட்பு கூட்டும் உறவு
அன்பு தேடிச் சாய்ந்தேன்
அவர் தின் தோளிலே!
அமுத மொழி பேசி
அவர் ஊட்டிய உணர்விலே
அகம் தொடும் காதலின்
அகத் தின்பம் அறிந்தேன்!