மண்ணுசிரி

என்னங்க பாட்டிம்மா மண்ணுசிரி-ன்னு சொல்லறீங்க?

மண்ணு நீங்க சொன்னா சிரிக்குமா?
@@@@@@@@@@
அடி போடி இவளே. எந்த ஊரு மண்ணும் சிரிக்காதுங்கறது எனக்கும்

தெரியும். நாங் கூப்புட்டது அமேரிக்காவிருந்து பத்து வருசம்ங் கழிச்சி

வந்திருக்காரனே நாம் பெத்த மூத்த கடங்காரன் முத்துவேலு அவம்

பெத்த மக மண்ணுசிரி-யத்தாண்டி கூப்பறேன். எம் மகனும் மருகளும்

அவளப் பாத்துக்கச் சொலிட்டு கடத்தெருவுக்குப் போனாங்க இன்னம்

காணம். பேரு வைக்கறாம் பாரு பேரு மண்ணுசிரி, மண்ணாங்கட்டிசிரி-

ன்னு. எல்லாம் கலிகாலண்டி பொன்னி.
@@@@@@@
பாட்டி நீங்க சொல்லற பேரு எனக்கு ஒண்ணும் புதுசு இல்ல. நாம்

படிக்கற கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்கூட அவரோட பொண்ணுக்கு

அந்தப் பேர வச்சிருக்காரு. அந்தப் பேர மண்ணுசிரி-ன்னு

சொல்லக்கூடாது பாட்டிம்மா. மன்ஸ்ரீ-ன்னுதாஞ் சொல்லணும்.
@@@@
போன்னி நீ படிச்சவ. உம் வாயில அந்த மாதிரி இந்திப் பேரெல்லாம்

நொழையும். பொறந்து வளந்தது பக்கத்து ஊரு சின்னப்பம்பட்டில .

அந்த ஊரும் பட்டிக்காடு. இப்ப நா வாழற கந்தப்பம்பட்டியும்

பாட்டிக்காடு. நாம் படிக்காதவ. என்னமோ நம்ம தமிழ பேருக்குப்

பஞ்சம் வந்திட்ட மாதிரி, படிச்சவங்க படிக்காதவங்க எல்லாம் சினிமா

பாத்துட்டு. பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்கள வச்சிடறாங்க.
@@@@@@@@@@@@
நீங்க சொல்லறதும் உண்மைதாம் பாட்டிம்மா. தமிழ் நாட்டில ரண்டு

மூணு தலமுறையா லட்சக்கணக்கான் இந்திக்காரங்க வாழ்ந்திட்டு

இருக்கறாங்க. ஒரு இந்திக்காரராவது அவரோட பிள்ளைக்குத் தமிழ்ப்

பேர வச்சிருப்பாரா? படிச்ச தமிழர்களுக்கே தன்மானமும்

மொழிப்பற்றும் மொழி சார்ந்த இனப்பற்றும் இல்லங்க பாட்டிம்மா.

அங்க நம்ம பக்கத்து மாநிலமான கர்நாடகாவிலே பாருஙக

ஆளுங்கட்சியே தமிழ் நாட்டுக்கு காவிரித் தண்ணீர் தரக்கூடாதுன்னு

போராடறாங்க. மத்தியல ஆட்சி செய்யற பாஜக-ங்கற கட்சியும்

போராறங்க. அங்க எல்லாம் கட்சி வேறுபாடுகள மறந்து கன்னடர்கள்-

ங்கற இன உணர்வோட போராடறாங்க. இங்க நம்ம தமிழ் நாட்டில

காலங் கடந்து எதிர்க்கட்சிங்கதான் போராடறாங்க. ஆளுங்கட்சி

இதுவரைக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தக்கூட கூட்டல. யாதும்

ஊரே யாவரும் கேளிர்-ங்கற பறந்த மனப்பான்மை உள்ள நாம

வன்முறை இல்லாத அறப்போராட்டம் நடத்தறோம். அங்க

வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு ஆளுங்கட்சியே வேடிக்கை

பாத்துட்டு இருந்ததுங்க பாட்டிம்மா.
@@@@@@@@@
ஆமாண்டி பொன்னி அந்தக் கண்றாவிக் காட்சிங்கள நானுந்தா அந்த

டிவி பொட்டில காட்டுனபோது பாத்து ரவுடித்தனம் பண்ணி ஒரு லாரி

ஓட்டற ஆள அரை நிர்வாணமாக்கி அவமானப்படுத்துன காட்சியப்

பாத்துக் காறித்துப்பினேண்டி பொன்னி.@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Shri (/ʃriː/ = a title of respect used before the name of a man,
ಶ್ರೀ; ਸ਼੍ਰੀ; શ્રી; শ্রী; ஷ்ரீ; శ్రీ; ശ്രീ = Luster, ஒளிர்வு, பளபளப்பு, மிகுந்த அழகு

MAN = SUPERNATURAL POWERS
= இயற்கைக்கு அப்பாறபட்ட/வியக்கத்தக்க சக்தி

நன்றி: இண்டியாசைல்ட்னேம்ஸ்காம். & யுனிவர்சல் டீலக்ஸ் அகராதி

எழுதியவர் : மலர் (18-Oct-16, 11:22 pm)
பார்வை : 191

மேலே