மனித ரகங்கள்

ஒரு மேடையை எதிர்பார்த்து ,
உள்ளே திறமை.
பலகவலையை உள்வைத்து
வெளியே சிரிப்பு.
சிரிக்கும் இதழின்,
ஓரம் அழுகை.
நிமிர்ந்த நடையில்,
திமிரின் தடயம்,
முறுக்கிய மீசையோடு,
முலைத்த காதல்.
தாடியின் அடர்த்தியில்,
காதல் தோல்வி.
சாலை ஓரம்
பிச்சைக்கு சந்யாசி.
சாப்பிட விடாமல் ,-செல்வந்தனுக்கு
சர்க்கரை வியாதி.
நெற்றியில் நாமமிட்டு,
நாத்திக கூட்டம்.
சாமியார் வேடத்தில்,-சில
நரிகள் ஆட்டம்
தெரிந்தே செய்து- மாதம்
பாவ மன்னிப்பு

மக்கள் வகையில்,
எத்தனை நகைகள்.
மனிதன் மனம்-அது
ஒரு மர்ம முடிச்சு!


-கமலேஷ்

எழுதியவர் : கன்தாசன் (20-Oct-16, 12:56 am)
பார்வை : 60

மேலே