நதிக்கரை ஞாபகங்கள்​

​@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இதயமெனும் நதிக்கரையில் நடக்கையிலே
ஊற்றெடுத்தது ஊறிக்கிடந்த ஞாபகங்கள் !
நெருங்கும் வயோதிகம் நெருடல் ஏற்பட்டது
சுருங்கும் ஆயுளும் சுற்றறிக்கை அனுப்பியது !

அரைக்கால்​ சட்டையுடன் அரட்டையடித்தது
​அறியாதவயதில் ஆலயத்தைச் சுற்றிவந்தது !
புரியாத நிலையில் வடமொழிபடம் பார்த்தது
​அந்நியமொழி ஆங்கில மோகம் கொண்டது ​!

​நினைவில் வந்தது முதல்வகுப்பு ஆசிரியை ​
​மனதும் நினைத்தது கல்லூரி பேராசிரியரை !
இடையில் நிகழ்ந்த இயற்கை வினோதங்கள்
படித்தக் காலத்தின் பருவநிலை நிகழ்வுகளை ​!

முதல்வேலை முதல்நாள் படபடக்கச் சென்றது
​மாற்றிட வேலையை உதவிகேட்டுச் சென்றது !
அடுத்த வேலையில் ஐந்தாண்டுகள் கழித்தது ​
​முடிவாக வங்கிப்பணியில் நிலைத்து முடித்தது !

இல்லத்து விழாக்களில் இன்பமுடன் இருந்தது
சோகமான நிகழ்வுகள் சோர்வடையச் செய்தது !
மாறிய சூழ்நிலைகள் மாற்றத்தைக் கொடுத்தது
உடல்நலக் கோளாறால் உள்ளத்தை பாதித்தது !

​நினைவலைகள் உணர்வலையில் கலந்து நிற்பது
கழியவுள்ள காலத்தை கவலையின்றிக் கடந்திட ​!
அந்தநாள் ஞாபகங்கள் மனதிலிருந்து மறையாது
உள்ளவரை உலகத்தில் உள்ளங்களும் மறக்காது !

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (21-Oct-16, 9:24 am)
பார்வை : 193

மேலே