விழிதிறந்த கண்ணாமுச்சி

என் முகநூல் தோழியே..
எந்நாளும் நீ தேவையே....
'வா' என்று சொன்னதும் ,
புயல் காற்றாய் பறந்து வந்தேன்!
இன்று 'போ' என்று நீ கடிந்ததும்,
உயிர் உறைந்து நிற்கின்றதே!
என் முகநூல் தோழியே..
எந்நாளும் நீ தேவையே..
காலை வணக்கம் என்றும்,
மாலை வணக்கம் என்றும் ,
பகிர்ந்து கொண்டதில் சுகம் ..சுகம்!
நண்பன் ஜோக்குகளை கேட்டு சிரித்ததில் ,
நானும் மகிழ்ந்தது ரொம்ப சுகம்..!
கேட்குதே ! உன் பூமுகத்தைக் கேட்குதே!
ஏங்குதே! அந்நாளை எண்ணி ஏங்குதே!
உன் காலில் விழுந்து, இதயம் கெஞ்சுதே...
உன் பாதம் மிதிப்பது ஏன்!!...
என் முகநூல் தோழியே..
எந்நாளும் நீ தேவையே..