முத்தங்களை சிதறுகிறேன்
கதிரவன் கலையும் முன்பே
என்னவள் தோள் மீது
சாய்ந்தாள் விடியலும்
ஓர் முதல் இரவு தானே...!
போகும் பாதை எல்லாம்
அழகான முத்துக்களை சிதறுகிறாயே
என்னோடு வா
நாள் முழுவதும் முத்தங்களை சிதறுகிறேன்
இதழ் வரியின் நடுவில்...!
உன் பேச்சு காற்றில் பட்டவுடன்
தேனீயும் உன்னை தேடுகிறது
தேன் பருக உன் உதட்டில்...!
இரவிலும் உன் புன்னகை
வழி தேடும் பறவைக்கு வழிகாட்டி
வலியோடு இருக்கும் எனக்கு அழகு நாட்காட்டி...!
துப்பட்டாவை வைத்து முகத்தை மூடினால்
விடியலிலும் இரவு என் மனதில்...!
உன் அழகை அந்தி மாலையில் கண்டால்
இரவிலும் விடியல் உன் மடியில்...!
-ஜ.கு.பாலாஜி-