மாலையுடன் வெண்ணிலாவும்

அந்த மாலையுடன் வெண்ணிலாவும் வருகை தந்தது
அந்தி மலர்கள் விரிந்து தேனைச் சொரிந்தது
தேனிதழ்களை தென்றல் வந்து முத்தமிட்டுச் சென்றது
அந்தி ஆதவனும் விடை பகர நினைத்த போது
நீயும் வந்து என் தோள் சாய்ந்து கண்களை மெல்ல மூடினாய்
அந்த மாலை நிற்கவோ அன்றி நகரவோ என்று தயங்கி நிற்குது !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Oct-16, 6:19 pm)
பார்வை : 108

மேலே