ஆகாயம்

வர்ணம் தீட்ட தெரியாத
ஓவியன் தீட்டிய வடிவற்ற காகிதம்!!!

நெய்திட பழகாத நெசவாளன்
நெய்த அழகற்ற பட்டாடை!!!

வெள்ளி கம்பி விரிசல் கொண்டதால்
கரிய திட்டுகள் களைந்து போனது!!!

கார் காலம் வந்து உன்னை
தன்னோடு மூடி மறைத்து கொண்டது!!!

எழுதியவர் : அனுஷா தேவி... (24-Oct-16, 4:53 pm)
Tanglish : aakaayam
பார்வை : 1630

மேலே