கூகுள் ஹாங் அவுட் !

கூகுள் ஹாங் அவுட் 
****************÷*÷***×× 
கூடும் அன்றில் பறவைகள் 
கூடு விட்டகலும் நேரம் 
கூகுள் ஹாங் அவுட்டில் 
கூடுவோம் வருவேன் என்றாள்! 

காண் திரையில் நல்லாள் 
கவின் முகம் காட்டும் நேரம் 
கண்கள் கண்டு களித்திடவே 
காலை புலரக் காத்திருந்தேன். 

துயில் மறந்த கண்களுடன் 
துடிக்கும் உயிர் மனதுடனே 
துவளாது தவம் இருந்தேன் - என் 
துன்பம் போக்கும் கணினி முன்! 

உதயக் கீதம் கேட்குது 
இதயம் இசைந்துப் பாடுது 
இனிய காலை புலருது 
உயிர்கள் உறவை தேடுது.! 

உயிர்க்கும் என் கணினியை 
உயிர் துடிக்கப் பார்க்கிறேன் 
உதயமாகும் காண் திரையில் 
உயிர்த்து வந்தாள் என்னவள்!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (24-Oct-16, 9:41 pm)
பார்வை : 75

மேலே