பரிசு

பரிசு......
படித்து முடித்து மூன்று ஆண்டுகள் ஓடிய வேகம் தெரியவில்லை...
"அட இவன் வெட்டிப்பயடா" என்ற ஏக வசனமும் செவிகளை செவிடாக்கிவிட்டதனால்,
அந்த சிறுவனின் கூப்பாடு செவிகளில் விழுவதற்கு நீண்ட நேரம் பிடித்தது..

அதுவரை வாய்க்காங்கரை மீது வெறித்து நடந்த "சுகுமாரன்" பக்கத்தில் கேட்ட குரலை கேட்டு திடுக்கிட்டு திரும்பினான்.

அங்கே அவ்வூரில் பெரிய தொழிற்சாலை வைத்திருக்கும் கனகுவின் மகன் சரண் நின்று கொண்டிருந்தான். சுகுமாரோ குழப்பத்துடன்,
"என்ன என்று கேட்டான்.."
சரண் அதற்கு,
"அண்ணா என்ன அமைதியாக போகிறீர்கள்? என்று அவசரமாக கேட்ட"
"இல்ல சும்மா போறன்..." என்று சோர்வடைந்த முகத்துடன் கூறினான் சுகுமாரன்.

"அப்பாவிற்கு நெஞ்சு
வலி வைத்தியசாலைக்கு கொண்டு போக வைத்தியம் செய்த முடியாது என்று கை விரித்து விட்டார்கள். அதுதான் அம்மா உங்களை அழைத்து வர சொன்னா...." என்று பதற்றத்துடன் கூறி முடித்தான் சரண்.

சுகுமார் படித்தது ஆயுள் வேத மருத்துவம் அதனால் தான் அவன் படிப்புக்கு தகுந்த வேலை இதுவரை கிடைக்கவில்லை.

சரண் கூறிமுடிக்கும் முன் அவனை அழைத்துக்கொண்டு தன் வீடு நோக்கி ஓடினான்.

வீட்டுக்குள் அவனது அறையில் சில பொருட்களையும் அவன் பறித்து வைத்திருந்த சில இலைகளையும் எடுத்துக் கொண்டு சரணின் வீட்டுக்கு சென்றனர்.

கனகு ஐயா நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருந்தார். சுகுமார் ஏதோ இலைகளை அரைத்து சில பொருட்களை கலவை செய்து அவருக்கு உண்ண கொடுத்தார்.

என்ன ஆச்சரியம் சில நிமிடங்களில் கனகு ஐயாவின் நெஞ்சு வலி இல்லாமல் போனது.

விழித்து எழுந்த கனகு ஐயா சுகுமாரன் கட்டித்தழுவி அணைத்துக் கண்ணீர் சிந்தினார். "அட இவன் வெட்டிப்பயடா" எனக் கூறி கேலி தன்னை இன்று காப்பாற்றியது தான் கேலி செய்த வெட்டிப்பயல் தான் என நினைத்து வருந்தினார் .

சுகுமார் எழுந்து அவருக்கு கொடுத்த அதே மருந்தை கொடுத்து உண்ணும் முறையை கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றான்.

கனகு ஐயா தனது பிழையை உணர்ந்து அதை நினைத்து வெட்கப்பட்டு நின்றார்.ஆனால் சுகுமாரன் புன்னகையை வீசிவிட்டு சென்றான்.

இவ்விடையம் ஊர் முழுதும் அன்றே காட்டுத்தீ போல் பரவியது. சில நாட்கள் சென்றன.வெட்டிப்பயடா என்ற பெயர் அதன் பிறகு இல்லாமல் மறைந்தது.

சுகுமாருக்கு ஒரு நாள் மாலை தந்தி வந்தது.அதாவது அவனுக்கு ஆயுர்வேத துறையில் வேலை கிடைத்திருக்கிறது பயிற்சிக்காக ஆறு மாதகாலம் பயிற்சி இடத்திற்கு வந்து தங்கி படிக்கும் படி. மகிழ்ச்சி கடலில் மூழ்கிய அவன் சென்று பயிற்சி பெற்று தன் அதே ஊருக்கு வருகிறான் ஆயுர்வேத வைத்தியராக.

ஊரே திரண்டு கூடி அவனை வரவேற்றது.அதன் தலமையாளாக நின்றது கனகு ஐயா.அவனை கேலி செய்த அனைத்து முகங்களும் இன்று அவனை தலைவணங்கி தம் செயலை நினைத்து கலங்கி நின்றது.

சுகுமாரின் நல்ல மனதுக்கும் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் கிடைத்த பரிசு தான் இவ் மரியாதை.மற்றும் தன் படிப்பால் வந்த இவ் வைத்திய வேலையை நினைத்து சந்தோசத்துடன்.தன் கடமையை சரியாக செய்ய நடக்கின்றான் தன் புதுப் பயணத்தை நோக்கி....

சி.பிருந்தா
மட்டக்களப்பு

எழுதியவர் : சி.பிருந்தா (25-Oct-16, 4:33 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : parisu
பார்வை : 206

மேலே