மந்திரப் புன்னகை

மந்திரப் புன்னகையால் - என்னுள்
தந்திரம் ஏதும் செய்தாயடி?
மனதை கருவாக்கி - அதில்
உருவாய் நீயும் ஜனித்தாயடி.

நெஞ்சுக்குள்ளே பூகம்பம்
நொடிக்கு நொடி நிகழுதடி
சுனாமி போல் உன் வரவால்
நானும் நிலைக்குழைந்து போனேனடி.

கண்ணை மூடி துயில் கொள்ள
மறந்தே தான் போனதடி
இரவில் உதிக்கும் சூரியனாய்
பழகிப் போனதடி என் விழிகள்.

விழியை உளியாக்கி - என்னுள்
காதல் சிற்பம் படைத்தாயே!
உன் விழி பட்டு வீழ்ந்த என் இதயம்
உன்னை மனைவியாக வேண்டுதடி......

எழுதியவர் : தங்கமணிகண்டன் (25-Oct-16, 9:55 pm)
Tanglish : manthirap punnakai
பார்வை : 105

மேலே