மனிதா ஒரு நிமிடம்

குளிபானக் கம்பெனிகளும்,
அடுக்குமாடிக் குடியிருப்புகளும்,
மீதேனும் மும்முனை போட்டியாக ,
நிலத்தடிநீரைப் பந்தாடித் தீர்க்க,
புத்தகம் சுமந்து பள்ளி செல்லும் வயதில்,
குடம் சுமந்து தண்ணி தேடி போக,
பூச்சாண்டிக்கும் கண்கள் கலங்குதடி ...தொண்டை விக்கி!!
ஆள்பவனும் , மக்களுக்கு தண்ணி காட்டுகிறான்..... டாஸ்மார்க்கின் லாபத்தில்!!

குறிப்பு:-
**********
மது மற்றும் போதை விழிப்புணர்வு பாடங்கள்,
பள்ளியில் கட்டாயமாக பாடமாக கொண்டு வரவேண்டும்...
நடக்குமா?

எழுதியவர் : பாரதி பறவை (26-Oct-16, 2:24 pm)
பார்வை : 418

மேலே