கர்ப நிலா
கர்ப நிலா
===========
அவள் அணைக்கும்போது
ஒருமழையில் நிரம்பிய குளமாகிறேன்
காஸ்மெட்டிக் அறியாத
கலியுக பெண் மாதிரியின்
சுய எடை அணிந்த போதைத் தொகுப்பு அவளாகிறாள்
அவள் என் விரல்களை மடக்கி
சிட்டிகை செய்து மனக்கணக்கு செயகிறாள்
நான் அவளுடைய
ஒழுகும் சிரிப்பினை
அடைத்துவைக்க இடம் போதாமல்
பெட்டகம் தேடுகிறேன்
என் கைக்கூம்பில் அடங்கும் அவள் முகம்
போர்வைக்குள் உதிக்கும் கர்ப நிலா
கட்டில் போதாதபோது
கேசம் சுரண்டி காடு தேடுவாள்
கைத்தரிப்புகளை
இராத்திரி நூலாக்கி அதில்
விடியும்போது செவ்வந்தி கோர்ப்பாள்
பூக்காரன் கவிதைகள்