மன்னியுங்கள் அப்பா

என் தெரு வழியே சென்ற
யாரோ ஒரு பெரியவர்
என்னிடம் பிச்சை கேட்கையில்
மௌனமாய் தந்தேன் கேள்வியின்றி
என் பையில் இருந்த அத்தனை பணமும்

அப்போதும் நிம்மதி இல்லை என்னில்
குற்றம் உள்ள நெஞ்சாய் என் மனம்
என் அப்பா கேட்கையில் இல்லாது போன
பணம் இன்று கொடுத்தும் இல்லை பயன்

மறிக்கும் ஓரிரு நாட்கள் முன்புவரை
என்னை வந்து பாரடா
பணம் வேண்டாம் உன் பாசம் போதும்
என்று கெஞ்சிய வார்த்தைகளும்

இன்றும் கேட்டு கொண்டே இருக்கும் ஓலங்கள்
வேலை பளு அதிகம் உடலின் அசதி அதிகம்
என்று தள்ளி போட்டுக்கொண்டே சென்றேன்
உன்னை பார்த்துக்கொள்ளும் வேலையை

என்ன செய்வேன் அப்பா
உழைத்தால்தான் காசு கிடைக்கும்
அப்போதுதானே உன் மருத்துவ செலவு நடக்கும்
என்றுதான் ஓடினேன் ஓடினேன்
நாளெல்லாம் ஓடினேன்

ஆயிரம் காரணம் சொல்லியும் புலம்பியும்
என்ன பயன் பாவிதான் நான்
இருந்தும் கடைசியாய் கேட்கிறேன்
ஒரு வரம் உன்னை நீ கடவுளானதால்
மீண்டும் பூமி வா என் பிள்ளையாய்
நிச்சயம் செய்து முடிக்கிறேன்
என் அத்தனை கடனையும்

எழுதியவர் : ருத்ரன் (30-Oct-16, 8:07 pm)
Tanglish : manneyungal appa
பார்வை : 81

மேலே