தனலட்சுமி

அவள் சேலையில்
தோன்றிடும்
அழகு மலர்..

அவள் கார்குழலில்
மேகத்தை கட்டி
இழுக்கலாம்..

அவள் அசைந்தால்
இந்த அகிலமும்
அசைந்திடும்..

அவள் வீசிடும்
பார்வையில் சூரியனும்
குளிர்ந்திடுவான்..

அவள் பேசிடும் மொழியில்
சிறு குழந்தைகள்
கொஞ்சிடும்..

அவள் நடையின் நளினங்கள்
தமிழ் மொழியின்
இலக்கணங்கள்..

அவள் கூந்தலில் சூடிடும்
ஒற்றை வெள்ளை ரோஜா
பூமியில் நிலா..

அவள் அசைவுகளில்
பல மொழிகள்
பிறந்திடும்..

அவள் அல்லவா
பூமிக்கு வந்த
நிலவின் மகள்..

எழுதியவர் : கா. அம்பிகா (1-Nov-16, 1:47 pm)
பார்வை : 200

மேலே