காதல்

உளி கொண்டு உருவாக்கிய
உளி சிற்பம் நான் ....

ஒளியை கொண்டு
உருவாக்கிய ஒளிச்சிற்பம் அவள் ....

இலை தூவி அசைந்தாடும்
மரம் நான் ....

காதல் தூவி இசைந்தோடும்
மனம் அவள் ..

எங்கோ போகும்
மேகம் நான் ....

ஒரிடத்தில் ஒளி வீசும்
நிலவு அவள் ....

பூக்கள் செய்த
பொம்மை நான் ...

புன்னகை செய்த
உண்மை அவள் ....

பஞ்சம் பார்த்த வறண்ட
பூமி நான் ...

நெஞ்சம் நனைத்த
பருவ மழை அவள் ....

காலம் மறந்த
கண்ணன் நான்....

காதல் வளர்த்த
ராதையும் அவள் ....

நேரம் செய்யும்
நினைவு நான் ...

காதல் செய்யும்
கனவு அவள் ...

எழுதியவர் : கிரிஜா.தி (1-Nov-16, 6:40 pm)
Tanglish : kaadhal
பார்வை : 166

மேலே