சிறகடிப்போம் காதல் வானிலே

சிறகடிப்போம் காதல் வானிலே...

சுகமான தென்றலாய் எனை
கடந்தாயடி
அகமார அழைக்கிறேன்
பிரியாமல் இருப்போமடி...

கேசமே அது உன் வாசமே
நேசமாய் வீசிடும் மலர் சுவாசமே...

குடையில் நனைந்தே கரைவோமடி
இடையில் புதைந்தே அகிலம்
மறப்பேனடி...

அதிமதுரம் சுவைப்பேன்
உன் இதழில் நானடி
உதிரம் கொடுப்பேன்
உனக்காக தானடி...

சாபம் நீக்க தேடி வாடி
தீபம் ஏற்ற ஓடி வாடி...

சிறகு முளைத்தே பறப்பேனடி
பிறகு உனையே தஞ்சம் அடைவேனடி...

அங்கம் முழுதும் ஆள்வேனடி
தங்கம் உனையே மணப்பேனடி...

வஞ்சிடும் விழிகள் வேண்டாமடி
கொஞ்சிடும் விழிகள் போதுமடி...

குணம் கொண்ட மங்கை நீயடி
பிரம்மன் செதுக்கிய
மணம் வீசும் நங்கை நீயடி...

சிந்தை மயங்கி நின்றேனடி
கந்தை நிலைக்கே சென்றேனடி...

தமிழ் பேசும் பைங்கிளி நீயடி
திமிர் இழந்தேன் உன் விழி அம்பில்
நானடி...

தனம் கொண்ட தாரகை நீயடி
சினம் வேண்டாம் உன் இடை
மேலே நானடி....

கயல் விழியால் ஈர்த்தாயடி
மையல் கொண்டே
மெல்லிடை மேல் சாய்ந்தேனடி...

சிரம் சாய்த்தாய் மடி மீதிலே
கரம் கோர்த்தே உயிர் துறப்பேன்
கல்லறை மீதிலே....

கலகம் விளைத்தாய் எனக்குள் நீயடி
திலகம் இடுவேன் உன் பிறை நெற்றி
மீதிலே....

தவம் இருந்தே உனை அடைவேனடி
சிவம் போலே உனை காப்பேனடி...

தழுவி முத்தம் தருவேனடி
வாழும் காலம் முழுதும் உன்
காலடி நானும் சேர்வேனடி....

தாளம் இசைப்பேன் உன் இடை மீதிலே
சாளரம் மேல் சாய்ந்தே நாமும்
காவியம் படைப்போம் காதல் வானிலே...

எழுதியவர் : அன்புடன் சகி (2-Nov-16, 3:46 pm)
பார்வை : 304

மேலே