வேம்பின் வீம்பு

உருவகக் கதை

மத்தியானப் போசனத்தை வயிறுமுட்ட உண்டபின் வேப்பமரத்தின் நிழலில் இருந்த கயிற்றுக்கட்டிலில் தலையணையுடன் வந்தமர்ந்தார் நாட்டு வைத்தியர் வேலுப்பிள்ளை. அவர் கொடுக்கும் மருந்துகள் வேப்பங்காயைப் போல் கசப்பதினால் அவரை அவ்வூர் வாசிகள் “வேம்பு வைத்தியர்” என்றுதான் அழைப்பார்கள். வேலுப்பிளளை என்ற பெயர் மறைந்து நாளடைவில் அவருக்கு வேம்பர் என்ற பெயர்தான் நிலைத்தது. நல்ல காலம் வம்பர் என்ற பெயர் மாறவில்லை. அவர் வீட்டுவளவுக்குள் எங்கு பார்த்தாலும் ஓங்கி வளர்ந்த வேப்பமரச்சோலை. அவர் வீட்டில் தினமும் வேப்பம் பூ வடகம் இல்லாத நாளில்லை.

கட்டிலில் நீட்டி நிமிர்ந்து அண்ணார்ந்தவாறு படுத்துதார் வேம்பர். காற்றில் வேப்பமரம் கல கல வென்று சிரித்தது.

ஏன் சிரிக்கிறாய் ? அதட்டிக்கேட்டார் வேம்பர்

“உனக்கும் எனக்கும் என்ன பெயர் பொருத்தம் பார்த்தாயா?” மரம் அவரைப்பார்த்து கேட்;டது.

“அதற்கு இப்ப என்ன?”

“ என்னை பற்றி உனக்கு கொஞ்சம் சொல்லப் போகிறேன் கவனமாய் கேள். என் பெருமை உனக்கும் பெருமை தான்”

“ சரி சொல்லு கேட்கிறேன்”

“சிந்து சமவெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்களின் பட்டியலில் எனது இலையும் ஒன்றாகும். வேப்பிலை இயற்கை அளித்த முதல் தமிழனின் மூலிகை மருந்து ஆகும் என்பதை முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது. வேம்பை பராசக்தியின் மூலிகை என்று சித்தர்கள் பெயரிட்டனர். அகஸ்தியர் கூட தனது பரிபூரணம் 400 என்ற நூலில் என்னை குறிப்பிட்டுள்ளார். அதனால் சக்திக்கு திருவிழாவெடுக்கும் போது கரக ஆட்டத்தில் எனக்கு முக்கிய இடம் கொடுக்கிறார்கள். அம்மன் கோயில், காளி கோயில் இருக்குமிடமெல்லாம் என்னைத் தல விருட்சமாக காணலாம். பொதுவாக என்னை வீட்டுக்கு முன் புறத்திலும் முருங்கைமரத்தை வீட்டுக்கு பின் புறத்திலும் வளர்ப்பது தான் நம் நாட்டின் வழக்கம். வேப்பமரத்தால் சுகாதார கெடுதிகளும் முருங்கை மரத்தால் பசிப்பிணிகளும் வராமல் தடுக்கலாம் என்பது முன்னோர் கருத்தாகும். வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் தொற்று நோய்களை கொண்டுவராமல் பாதுகாப்பதற்கே என்னை காவலனாகப் பயன் படுத்துகிறார்கள். பொதுவாக என்னைப் பார்ப்தாலும், என் அடியில் அமர்வதனாலும் என்மேல் பட்டு வரும் காற்று மனோவியாதிகள் உள்ளவர்கள் மேல் பட்டாலும் மனம் அமைதியாகும். மனோவிகாரங்கள் சாந்தமாகும்.

“அது சரி உனக்கும் கிரகங்களுக்கும் என்ன சம்பந்தம்.?”

“நான் நவக்கிரகத்தில் கேதுபகவானுக்குப் ப்ரியமானவள். ஜாதகத்தில் கேது தசாபுத்திகள், கோச்சரங்களில் கெடுதல் தரும் காலஙகளில் எனக்கு மஞ்சள் குங்குமமிட்டு , 9 தினங்களுக்கு காலை மாலை கற்பூரம் தீபாராதனைசெய்து வழிபட கேதுபகவான் கிருபையால் கெடுதல் பலன் சாந்தியாகும். என் மரத்தின் சமூலத்தை சமமாக எடுத்து தூள் செய்து தேனில் அரைத்து நெற்றியல் திலகமிட்டுவர மிருகங்கள் வசியமாகும் என்கிறது நமது நாட்டு சாஸ்திரங்கள்.”

“ பல காலமாக உனது மகிமை இருந்து வருகிறதா?”

“2500 ஆண்டுகட்கு முன்னரே தமிழகத்தில் வேப்பிலை மருந்துவம் எல்லா நோய்கட்கும் தீர்வளிக்கும் முதல் மூலிகை மருந்தாகப் பயனாகி வருவதை இன்றைய பழக்கத்தின் மூலமாகவும் அறியலாம்.

“ முலிகையா?. நான் கொடுக்கும் குளுமையைவிடவா சிறந்தது?”

“ஆமாம். தமிழ் குக்கிராமங்களில் இன்றும் கூட குழந்தை பிறந்தால் 9வது நாளிலிருந்து வேம்புத்துளிர் இலைகளை 3 எடுத்து சீரகம் 5, மிளகு 2 தூள் செய்து அதனை ஒரு சிறு துணியில் முடிந்து தாய்ப்பாலில் தோய்த்து ஊறியபின் 5 சொட்டுகள் பாலில் பிழ்ந்து வாரம் 2 நாள் புகட்டுவார்கள். வேப்பங்காரம் என்று இந்த சிகிச்சைக்கு பெயர்Immune Drops என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடத்தக்க வகையில் இந்த வேப்பங்காரம் குழந்தை உடம்பில் நோய் எதிர்ப்பாற்றலை ஊக்குவித்து உடம்பில் தொற்று நோய் வராமல் பாதுகாக்கிறது.”

“ வேப்பம் மரத்துக்கும் தொற்று நோயுக்கும் என்ன தொடர்பு?”

“ அம்மை , பொக்களிப்பான் போன்ற தொற்று நோய்கள் வந்தால் தலையணையில் வேப்பம் இலையைத்தான் வைப்பார்கள். அதுவுமல்லாமல் வீட்டு வாசல் படியில் கூட வேப்பம் இலையைக் கட்டி விடுவார்கள். வேப்பங்காரம் சாப்பிட்ட குழந்தைகள் போலியோ, டைபாய்டு மற்றும் மலேரியா காய்ச்சல், சர்மநோய் போன்ற தீவிர நேர் வராமல் திடகாத்திரமாக வளர்ந்தன. நாடு விடுதலை அடைந்தவுடன் அரசாங்கமும் மக்களும் மூலிகை மருத்துவத்தை மூடநம்பிக்கையான பச்சிலை மருத்துவம் என ஒதுக்கிவிட்டனர். அதனால் இந்த வேப்பங்காரம் எனும் ஐனெயைn ஐஅஅரநெ னுசழிள கைவிடப்பட்டது. அதன் விளைவாக போலியோ, டைபாய்டு, சர்மநோய்கள் பெருகின.

இன்றைய இளம் தாய்மார்கட்கு வேப்பங்காரம் எனும் Immune Drops பற்றிய அறிவு அறவே கிடையாது. பிறந்த குழந்தை எதனால் அழுகிறது? என்ன கொடுக்க வேண்டும்? எப்படி? எப்போது? எவ்வளவு கொடுக்கவேண்டும்? என்று அனுபவ அறிவு கிடைக்காததால் சளியா? சலதோஷமா? காய்ச்சலா? அஜீரணமா, மலச்சிக்கலா? ஓடு! ஓடு! டாக்டரிடம் தேடி! என்பதே அன்றாடப் பழக்கமாகி விட்டது. அதன் விளைவு மளிகை கடை பில்களை விட குழந்தைகள் மருத்துவ பில் இரண்டு மூன்று மடங்கு அதிகம். போதாக் குறைக்க பக்க விளைவுகளால் டிசநயமனழறn ஆகி, வளரும் போதே நோயாளிக்குழந்தை எனப் பட்டப் பெயர் பெருகின்றது.

“இப்படி யககநஉவ செய்யும் அலோபதி மருந்துகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்க என்ன வழி? என்று இளம் தாய்மார்கள் குழம்பித் தவிக்கின்றனர். அதற்கு உன் பதில் என்ன?”

“இவர்களுக்கு ஒரு நல்ல வழி கூறுகிறேன். "வேப்பங்காரம்" வாரம் 2 நாட்கள். பிறந்த குழந்தையாக இருந்தால் 3 வேப்பந்துளிர், சீரகம் 5, மிளகு 2 தூள்செய்து தாய்ப்பாலிலோ அல்லது பசும்பாலிலோ கலந்து புகட்டுங்கள். ஓராண்டு முதல் 5 ஆண்டு வரையிலான குழந்தைகட்கு 10 வேப்பந்துளிர் ஒரு சிட்டிகை சீரகம், மிளகு 10 தூள் செய்து தேன்கலந்து வாரம் 1 நாள் நாவில் தடிவி விடுங்கள். ஐஅஅரநெ டிழழளவநச ஆன வேப்பங்காரம்' குழந்தையை நோயின்றி ஆரோக்கியமாக பாதுகாக்கும்.

சிந்து சமவெளி தொடங்கி, நம் மூதாதையர் வரை பயன்படுத்தி நலமுடன் வாழ்ந்து வர உதவிய இந்த வேப்பங்காரம் சொட்டு பற்றி மேனாட்டவர் இன்றும் அறியவில்லை. எப்படியோ 5000 ஆண்டுகட்கும் மேற்பட்ட வரலாறு கொண்டுள்ள வேம்பு மருத்துவம்

“ அதொ பார் உன் கிளையொன்று முறிந்து கிடப்பதை”

“ வேப்பக் குச்சியை ஆலம் விழுது போலட பல் துலக்க பாவிப்பார்கள். என்னை பறபசை தாயரிக்கக் கூட பாவிப்பதுண்டு. ஒரு காலத்தில் வேப்பங்குச்சியால் பல் துலக்கியவர்களின் பற்கள் எனபது வயதிலும் ஆடாது நோயில்லாமல் இருக்கும”

“அவ்வளவுக்கு நீ மானிடர்களுக்கு உதவிசெய்கிறாயா?

“என்னில் இருந்து பயன் பெற்ற அவர்கள் செய்நன்றி மறந்து என்னை வெட்டி எடுத்து தளபாடங்கள் செய்கிறார்கள். “

“ உண்மைதான். ஆனால தச்சு வேலை செய்பவர்கள் பழைப்புக்காக செய்கிறார்கள். சிலர் உன் பூவைக்கூட விட்டு வைப்பதில்லை. எனக்கு உன் பூவிலிருந்து செய்த வேப்பம் பூ வடகம் எனறால் நல்ல விருப்பம்”

“ ஏன் பூவை மாத்திரம் சொல்லுகிறாய். வேப்பெணணை கூட உடம்புக்கு நல்லது தான். நீ விளக்க வெளிச்சத்தில் படிக்கும் போது வேப்பெண்ணெயில் திரியை எரிய விடு. அது உண் கண்களுக்கு நல்லது”

“ உன் உடம்பெல்லாம் மூலிகை நிறம்பி இருக்கிறது போல இருக்கு”

“அது தான் இயற்கையன்னை எனக்குத் தந்த வரப்பிரசாதம்.”

“சரி சரி எனக்குத் தூக்கம் வருகிறது. எந்த கெட்ட காற்றும் என்னைத் தீண்டாத வாறு எனக்கு காவல் இருப்பாயா?”

“நிட்சயமாக. பிறருக்குப் பணி செய்வதே என் விருப்பம்”

“அதோ உன்னைத் தேடி வேப்பிலை வைத்த்தியத்துக்காக வந்திருக்கிறார்கள் அவர்களை போய் கவனி.” வேப்பமரம் விடைபெற்றது.



**********

எழுதியவர் : பொன் குலேந்திரன் -கனடா (3-Nov-16, 4:35 pm)
பார்வை : 306

மேலே