கண்ணீர் சுடுகிறதே கண்ணீர் சுடுகிறதே

எந்தன் பிழையென்று அறிந்திட ஏதும் இல்லை
விதியின் பிழையோ என அறியும் வயதுமில்லை
போராடி வெல்லும் ஒரு பக்குவம் எனக்கில்லை
கடவுள் விட்ட வழி என்று நினைக்கவும் முடியவில்லை

முடிவில்லா சோகமென எல்லா நொடிகளுமே
தொடர்ந்தால் முடியாதே வாழ முடியாதே
இரக்கமே இல்லாமல் தொடரும் சோதனையை
வென்றிட மனம் கொடு இல்லை மரணிக்க என்னை விடு

வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல்
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் வாராமல்
நரகம் உணர்கின்றேன் மரணம் காணாமல்
கண்ணீர் சுடுகிறதே கண்ணீர் சுடுகிறதே

எழுதியவர் : ருத்ரன் (3-Nov-16, 9:39 pm)
பார்வை : 88

மேலே