அவள் சுவாசக் காற்று நான்

மேகங்கள் ஒன்றுகூடி
மனதை மயக்கும்
மாலை வேளை...!

அவள் மேனியில்
புரளும் காற்று
தென்றலாய் வந்து
காது கடிக்கும் மாலை..!

சிந்தையெல்லாம் அவள்
என் கண்ணின்
பிரதிபலிப்பு
கீழ் வானம் சிவப்பு..!

அசைந்து ஆடும்
கொடிகளெல்லாம்
மகிழ்ந்த வண்ணம்
கேட்டது...
எங்கே உன் காதலி என்று...?

பதுமையவள்
பத்திரமாய்
அவள் வீட்டில் என்றேன்...!

அவள்தான் காரணமோ
உன் பசலைக்கு என்றது...?

அவளே காரணம்
நீ விலைபோகாமல்
இருப்பதற்கு என்றேன்...!

காதோரமாய்
காயத்திற்கு
மருந்திடவா
என்றது வேம்பு..!

என் மன காயத்திற்கு
களிம்பு உன்னிடம்
இல்லையென்றேன்.
வேகமாய் தலை திருப்பிக் கொண்டது...!

தேனெடுக்கும் வண்டு
சேதி சொன்னது...!

சதா தேன்வழியும்
உன்னவள்
சகாராவாய்
மறி கிடக்கின்றாள் என...

வெண்ணிலவை
தூதுவிட்டு
கேட்டேன்
பெண்ணிலவிற்கு
என்ன ஆனது என்று..!

வெண்ணிலவு சொன்னது
என்னானது அங்கேயும்
பசலை என்றது...!

உடல் மெலிந்துவிட்டாளோ
என்றேன்..!

சோகம் கூடிவிட்டது என்றது..

இதழ்கள் வாடிவிட்டாதா
என்றேன்..!

உடலில் பசலை கூடிவிட்டது
என்றது...!

புரியும்படி சொல்லென்றேன்...!

மடையா சந்தித்து வா என்றது...!

சிந்திக்க நேரமில்லை
காற்றாய் மாறினேன்
அவள் அறியாமலே
அவள் மூச்சுக்
குழாயில்
மிதந்து கொண்டிருக்கின்றேன்...!

மகிழ்சியில் தவழ்ந்துகொண்டு இருக்கின்றேன்...!

கி வீரமணி
வயலூர்...

எழுதியவர் : வீரமணி கி (4-Nov-16, 12:10 am)
பார்வை : 108

மேலே