அவள்
அவள் பஞ்சு
பொதிகையில்
அடைபட்ட நான்
மிஞ்சி வர தவிக்கிறேன்..!
எனினும் தீராத
சுகத்தில் மிதக்கிறேன்...!
அவள் மூச்சு
இழுத்து விடும்
நேரத்தில்
புறம் வந்து விழுவேனோ
என எண்ணி எண்ணி
பயத்தினில் துடிக்கிறேன்..!
பதுமைக்குள் பரவசம்
அடைகிறேன்...!
அவள் உண்ணுகையில்
சிந்துகிற பறுக்கைகே
கையேந்தி கிடக்குறேன்..!
என் காலத்தை
அவள் மடியினிலே
தினம் கழிக்கிறேன்...!
முத்திடாத உன் முக்குக்கே
என் முத்தமிழ் வளையுமடி!
எவரும் கொய்யாத உன்
இதழுக்கே கறுதறித்து
கவிதை ஆயிரம் பொழியுமடி..!
கம்பனுக்கு
கிடைத்திட்ட சீதையடி..!
சீழ்வண்டுக்கு
நீ தேனூற்றடி..!
சித்திரைக்கு நீ
நிலவடி..!
என்
நித்திரைக்கு
நீயே உரவடி...!!!
வீரமணி கி
வயலூர்
விருத்தாசலம்.