சிந்தனை சித்தாந்தம் --முஹம்மத் ஸர்பான்

எண்ணற்ற தோல்விகள்
மனதின் நம்பிக்கையில்
சங்கமம் தொட்டு
வெற்றியை தேடுகிறது

கனவின் வித்துக்கள்
இலக்கின் விளைச்சல்
தர்மத்தின் வித்துக்கள்
கல்லறை விளைச்சல்

எழுத்துக்கள் ஆயுதங்கள்
நேசிப்பவன் உயிர் மூச்சு
சரித்திரங்கள் ஆயிரங்கள்
வரலாற்றின் தியாகங்கள்

பாலைவனத்தின் ஈரம்
கானல் நீரின் மேல் தாகம்
சோலைவனத்தின் ஓரம்
சிதைந்த கனவின் மேகம்

ஒரு துளி சேமிப்பில்
பல யுக வாழ்க்கை
விழி நீர் சேமிப்பில்
தடம் புரளும் கனவுகள்

முட்களின் கோபத்தில்
பூக்களும் உதிர்கின்றது
நாட்களின் வேகத்தில்
வாழ்வும் முடிகின்றது

பீடைகளை அஞ்சி
நெற்கதிர் அழுகிறது
பாடைகளை சுமந்து
விறகுகள் எரிகிறது

கல்லறை ரோஜாக்கள்
முட்காட்டின் பசளைகள்
கருவறை குற்றங்கள்
அனாதை இல்லங்கள்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (4-Nov-16, 7:56 am)
பார்வை : 204

மேலே