அம்மாவின் அழகு

அழகி தேட அவாகொண்டு
உலவி வர சென்றேனின்று

கோவிலில் கண்ட கோகிலா
கோவத்தில் கொள்ளையழகு

பூங்காவில் பூத்திருந்த பூமிகா
புன்சிரிப்பில் புதுஅழகு

தங்கையின் தோழி தங்கரதி
தவழ்நடையில் தனியழகு

கல்லூரிகால காதலி கவிதாவின்
கண்களில் கலையழகு

என்றாலும் எல்லாமும் அழகாய்
எவரையும் காணேன்

விடியலும் வியர்வையும் வடிந்தபின்
விரைந்திட்டேன் வீட்டிற்கு

கலைந்த தலையும் கசங்கிய உடையுமாய்
கதவைதிறந்து கனிவுமொழி பேசிய

அம்மாவிடம் அடைக்கலமாயிருக்க கண்டேன்
அகிலத்தின் அத்தனை அழகும்

எழுதியவர் : (4-Nov-16, 10:32 am)
Tanglish : ammaavin alagu
பார்வை : 102

மேலே