பவ்வியா, பவ்வுலையா

பவ்வியா, பவ்வியா!
எங்கடி போயிட்டா? உன்னக் கூப்புட்டுக் கூப்புட்டு எந் தொண்டையே வறண்டு போச்சு.
@@@@@@@@
என்ன பாட்டிம்மா பேசிட்டு இருக்கறீங்க?

@@@@@
பீக்காருல இருந்து எங் கடசி மவன் கண்ணப்பன் வந்திருக்கறாண்டி பொன்னி. எம் மவனும் மருமவ மலர்கொடியும் கடத் தெருவுக்கு போயிருக்கறாங்கடி பொன்னி. அந்த ஊருலதான் பசங்க மூணாவது மாடிலபரிச்ச எழுதிட்டருக்கறபோது அவுங்களோட அம்மா, அப்பா எல்லாம் கட்டத்தோட பின்புறமா ஏறி சன்னல் வழியா பசங்களுக்கு பாத்து பதில எழுதச் சொல்லி புத்தகமெல்லாம் குடுப்பாங்களாமே. அந்த ஊர்லதாங் கண்ணப்பன் வேல பாக்கறான்.
@@@@@
அது ஊரு இல்ல பாட்டிம்மா. நம்ம தமிழ் நாடு மாதிரி பீகார் ஒரு மாநிலம்.சரி அங்க இருக்கற பசங்க பரிட்சைல காப்பி அடிக்கறதை எல்லாம் எதுக்குச் சொன்னீங்க?

நானும் அந்தக் காட்சிங்கள சன் டிவில பாத்திருக்கறேன் பாட்டிம்மா.
@@@@@@@
அங்க இருந்து வந்தவதாண்டி எங் குறும்புக்காரப் பேத்தி பவ்வியா. பேரப் பாரு பேரு பவ்வியாவாம். அங்கேல்லாம் பவ்வியா பவ்வுலையா, கவ்வியா, கவ்வுலையா, தவ்வியா, தாவினயான்னெல்லாம் பேரு வச்சுக்குவாங்க போல இருக்குது.

அந்தக் கெரகம் புடிச்ச புள்ள ரோம்ப நேரமாக் காணம்டி பொன்னி. பல தடவ அவளக் கூப்புட்டேன். எங்க போனாளோ தெரில. நாங் கத்திக் கத்தி எந் தொண்ட வறண்டதுதாண்டி மிச்சம்.

@@@@@@@
பாட்டி அது இந்திப் பேரு. பவ்யா-ன்னுதாஞ் சொல்லணும். நம்ம தமிழ் நாட்டிலயும் இந்திக்காரங்க இல்லாத பெரிய ஊருங்களே இல்ல. ஆனா ஒரு இந்திக்காரருகூட தம் பிள்ளைக்கு தமிழ்ப் பேர வச்சதா வரலாறு கெடையாது. அவுங்கெல்லாம் அவுங்க தாய் மொழிய மதிக்கறாங்க. நம்ம தமிழங்கதான் தாய் மொழியவே கேவலப்படுத்தறவங்க. சினிமாப் பாத்து நம்ம தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் சீரழிக்கறவங்க நம்ம ஆளுங்கதாம் பாட்டிம்மா. அவுங்களுக்கு எப்பிடி தாய் மோழி மேல பற்று வரும்? தாய் மொழிப் பேர பிள்ளைங்களுக்கு வைக்கணுங்கற எண்ணம் வருமா?
#@@@@
என்னடி பொன்னி பண்ணறது? இதத்தாங் கலி முத்திப் போச்சுனு பெரியவுங்க சொன்னாங்ஙளோ என்னவோ?

எழுதியவர் : மலர் (4-Nov-16, 8:32 pm)
பார்வை : 250

மேலே