என்னங்க - பொண்டாட்டியின் அழைப்பு

#மனைவி

பாத்ரூமில் நின்று ”என்னங்க”
என்று அழைத்தால்
பல்லி அல்லது கரப்பான்பூச்சி அடிக்க என்று அர்த்தம்.

சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க”
என்று அழைத்தால்
பில்லை கட்டு
என்று அர்த்தம்.

கல்யாண வீட்டில்
”என்னங்க” என்றால் அவளது உறவினர் யாரோ வந்திருக்கிறார் வேகமா வாங்க என்று அர்த்தம்.

துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால்
தேடிய புடவை கிடைத்து விட்டது
என்று அர்த்தம்.

வாகனத்தில் செல்லும் போது ”என்னங்க” என்றால்
பூவாங்க வேண்டும் என்று அர்த்தம்.

மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால்
டாக்டரிடம் என்ன பேசவேண்டும் என்று அர்த்தம்.

வெளியே பார்த்து ”என்னங்க” என்றால் தெரியாத ஆள்
வாசலில் என்று அர்த்தம்.

பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்றால் வைத்த பணம் எங்கே என்று அர்த்தம்.

சாப்பிடும்போது "என்னங்க" என்றால் நமக்கு பிடிக்காத ஒன்றை கூற போகிறாள்
என்று அர்த்தம்.

ஆடை அணியும்போது
"என்னங்க" என்றால்
இந்த உடையில் அழகா இருக்கேனா என்று அர்த்தம்.

தரையை பார்த்து "என்னங்க" என்றால் அம்மாவீட்டுக்கு போக அனுமதி வேண்டும் என்று அர்த்தம்

இப்படி காலமெல்லாம் அழைத்தவளின்

"என்னங்க" என்ற அழைப்பு
கேட்கவில்லை என்றால் அவள் முடிந்து போனாள் என்று அர்த்தம்....!

அவன் இன்றி ஓர் அணுவும்
அசையாது இவ்வுலகில்...
இவள் இன்றி கணவனுக்கு
எதுவுமே இயங்காது வாழ்க்கையில்...

இவள் தான் மனைவி.

எழுதியவர் : முகநூல் (5-Nov-16, 1:17 am)
பார்வை : 569

மேலே