படித்தால் பிரமித்து போவீர்கள்★

*படித்தால் பிரமித்து போவீர்கள்*

பூமிக்கு அடியில் ரகசிய சுரங்கங்கள், குகைகள் அமைத்து அதில் நாம் கற்பனைக்கு எட்டாதா ஆராய்ச்சிகளை செய்துவருகிறார்கள். இன்றல்ல நேற்றல்ல, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இப்படியான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.
என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா?

Selim Hassan மற்றும் அவரது குழுவினர் இணைந்து எகிப்தில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். 1933-34 காலகட்டத்தில் Selim Hassanன் குழுவினர் கண்டறிந்தது அவர்களுக்கே ஆச்சர்யமாக இருந்தது. *The Great Giza* பிரமிட்களுக்கு அடியில் ஒரு பெரிய சுரங்கம் இருப்பதைக் கண்டறிந்தனர். அதனுள் சென்று ஆய்வு செய்ய எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் முடியவில்லை நீர்புகுந்து கொண்டதால் அவர்களை உள்ளே நுழையமுடியாமல் செய்தது.

எனவே Selim Hassan குழுவினர் சுரங்கத்திற்குள் செல்லும் முயற்சியை கைவிட்டனர். அதன் பின் 1999ல் Zalti Hawass மற்றும் அவரது குழுவினர் இணைந்து Selim Hassan விட்ட பணியை நவீன தொழில்நுட்பங்களின் துணை கொண்டு மீண்டும் தொடங்கினர். நீரை வேகமாக வெளியாக்கி கொஞ்சம் கொஞ்சமாக சுரங்கத்திற்குள் நுழைந்தனர். உள்ளே செல்லச்செல்ல Zalti Hawass ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.

ஏனெனில் இந்த சுரங்கம் கிட்டத்தட்ட 4300 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் எப்படி இவர்களால் இவ்வளவு நேர்த்தியாக இந்த சுரங்கத்தை உருவாக்க முடிந்தது. இப்படியான செங்குத்தான சுரங்கம் அமைப்பது மிகவும் கடினம் இது எப்படி அவர்களால் சாத்தியமானது என்று ஆய்வாளர்கள் வியக்கிறார்கள். அடுத்தடுத்து அதனுள் இருக்கும் மூன்று தளங்களைக் கண்டறிந்தார்கள்.

அதற்குக்கீழே அவர்களால் செல்லமுடியாவில்லை, எவ்வளவு பெரிய இயந்திரம் கொண்டு தண்ணீரை வெளியாக்கினானும் அடுத்தகனமே தண்ணீர்நிரம்பிவிடுகிறாம். எனவே நீரில் மூழ்கி சென்று ஆய்வு செய்யும் கருவிகளை கொண்டு ஆய்வை தொடரலாம் என்று இருந்த Zalti Hawass குழுவினருக்கு இந்த ஆய்வை இத்துடன் முடித்துக்கொள்ளுமாறு ரகசிய உத்தரவு வந்தது, ஆய்வும் நிறுத்தப்பட்டது.

Zalti Hawassன் குழுவினரில் சிலர் வாய்திறந்தனர். அவர்களின் கூற்றுப்படி அவர்கள் கண்டறிந்த மூன்று தளங்களை இல்லாமால் இன்னும் நிறைய தளங்கள் உள்ளே இருக்கின்றனவாம், இன்னும் சொல்லப்போனால் கண்டறிந்த மூன்று தளங்களும் வெறும் நிழைவுப்பாதைதானாம் உள்ளே ஒரு சிறிய நகரமே இருக்கிறதாம். இப்படி பல ஆச்சர்யங்களை அடுக்கிக்கொண்டே போனாலும் இறுதியில் ஒரு கேள்வி அந்த ரகசிய உத்தரவை பிரபித்தது யார்?

அவர்கள் இப்படி தடுப்பதை பார்த்தால் அங்கு ஏதோ ஒரு மர்மம் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

ஆய்வாளர்கள் சொல்வதைப்போல பூமிக்கு அடியில் ஒரு நகரத்தை உருவாக்குவது சாத்தியமா? என்று கேட்டால் சாத்தியம் தான் என்று சாட்சியாக *Derinkuyn Underground City*

*Derinkuyn Underground City*யை பற்றி உங்களில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. துருக்கியில் (Turkey) 2800 வருடங்களுக்கு முன்பு பூமிக்கு அடியில் ஒரு நகரத்தையே உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆம் “சுரங்க நகரம்”. இதனை “சுரங்க நகரம்” அழைக்க காரணம் என்னவென்றால் ஒரு மனிதன் இதனுள்ளே நுழைந்துவிட்டால் தன் வாழ்நாள் முழுவதும் வெளியே செல்லாமலே இங்கேயே வாழ்ந்துவிடமுடியும் என்ற அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.

*இடம், உணவு, சுத்தமான நீர், சுத்தமான காற்று, உடை, மருத்துவமனை மருந்துப் பொருள்கள்*, என்று அனைத்தும் இங்கே கிடைத்திருக்கிறது.

சுமார் 2 ஆயிரம் பேர் தங்குவதற்கு தேவையான இடவசதியும் இருக்கிறது. பார்ப்பவர்கள் இது கனவா? நினைவா? என்று கிள்ளிப்பார்க்கும் அளவிற்கு அவ்வளவு நேர்த்தியான வடிவமைப்பு *தனித்தனி அறைகள், நூலகம், மருந்தகம், கல்விக்கூடம் காற்றுவருவதற்கான பித்தியேக சுரங்கங்கள் சன்னல்கள், மழைநீர் சேமிப்பு கலன்கள* என்று நீண்டுகொண்டே போகின்றன.

இவை அனைத்திலும் உச்சம் இந்த சுரங்க நகரம் இன்னும் முழுவதுமாக தோண்டி முடிக்கப்படவில்லை. அதிகபட்சமாக 278 அடி ஆழம் வரை கண்டறிந்துள்ளார்கள்.

ஆனால் அதற்கு கீழும் பல பகுதிகள் மறைந்திருக்கின்றனவாம். இப்படி ஒரு சுரங்கத்தை யார் உருவாக்கியிருப்பார்கள்? என்ன காரணத்திற்காக உருவாக்கியிருப்பார்கள்? கண்டறிந்தவரை அதில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வெளியில் சுதந்திரமாக வாழ்வதை விடுத்து ஒரு நகர மக்களே ஏன் சுரகங்கத்திற்குள் வாழவேண்டும்? அண்டை நாட்டு போருக்கு பயந்து ஒழிந்து வாழ்ந்திருப்பார்கள் என்ற கூற்றும் நிலவுகிறது.

இப்படியான சுரங்க நகரத்தை உருவக்குவது என்பது சாதாரண காரியமல்ல. அதிக திறன், தொழில்நுட்பம், ஆள்பலம் தேவை. ஒரு சுரங்க நகரத்தையே உருவாக்க தெரிந்த அந்த மக்களுக்கு போர் எல்லாம் சுண்டக்காய் விசயம்.

அவர்கள் பயந்து வாழ இதை உருவாக்கவில்லை, மறைந்து வாழ உருவாக்கியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கண்டிப்பாக மனிதர்கள் இதனுள் வாழ்வதற்காக இந்த சுரங்கங்கள் உருவாக்கவில்லை.

வெளியுலகிற்கு தெரியாத ஏதோ ஒன்று இங்கே நடந்திருக்க வேண்டும்.

எழுதியவர் : முகநூல் (5-Nov-16, 7:34 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 562

மேலே