பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை

ஒரு இளம்பெண் தன் வீட்டுச் சுவரில் பூங்கொடி ஒன்றினை நட்டிருந்தாள். அதற்கு நாள்தோறும் தவறாமல்
ஆசை ஆசையாய் நீர் ஊற்றி மிகவும் ஆர்வமாய் வளர்த்து வநதாள்.
பூங்கொடி வளர்ந்து நீண்டுகொண்டே போனது, ஆனால் பூ... பூத்ததாய்த் தெரியவில்லை, அந்த இளம் பெண் மிகவும் வருத்தப்பட்டாள்...அவள் வருத்தப்பட்டு கொண்டிருந்த சமயம், சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், அவளுக்கு நன்றி தெரிவித்தார்.
எதற்கு இவர் நன்றி சொல்கிறார் என்று தெரியாமல் விழித்த அந்ந இளம் பெண்ணிடம்
“உங்கள் வீட்டிலிருந்து படர்ந்த கொடி எங்கள் வீட்டுக்குள் எப்படியெல்லாம் பூத்துக் குலுங்குகிறது தெரியுமா? கண்கொள்ளா காட்சியாக இருக்கின்றது என்று சந்தோஷத்தோடு ..........."மிக்க நன்றி” ....என்றார்.

நம்முடைய சில முயற்சிகளின் விளைவுகள் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் எங்கோ எவருக்கோ
நன்மை கொடுக்கும். பயனில்லாத முயற்சியென்று எதுவுமில்லை.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (6-Nov-16, 12:39 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 318

மேலே