ரிமோட்

ஞானன் ஒரு நவீனமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார்.

அதை வீட்டில் பொருத்தி, செய்முறை விளக்கம் கொடுக்க ஒரு ஊழியரும் வந்திருந்தார்.

தங்கள் நிறுவன தொலைக்காட்சி பெட்டியின் சிறப்பை ஓயாது வர்ணித்த ஊழியர், பின் ரிமோட்டை எடுத்தார்.

அதை ஞானனிடம் காட்டிய ஊழியர்,

"இது மிகவும் நுட்பமானது. இதன் வீச்சும் திறனும் மிக அதிகம். வாருங்கள் காட்டுகிறேன்" என்று சொல்லி, பக்கத்தில் இருந்த 15 மாடிக்கட்டிடத்தின் உச்சிக்கு அழைத்துப் போனார்.

அங்கிருந்து ரிமோட்டை இயக்க, ஞானனின் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி மிக அழகாக இயங்கியது.

ஞானனுக்கு பரம திருப்தி..

ஒரு மாதம் கழித்து தொலைக்காட்சி பெட்டி நிறுவனத்துக்கு போன் செய்த ஞானன் சொன்னார்,

"தயவு செய்து எனக்கு ரிமோட் மாற்றிக் கொடுங்கள்.. ஒவ்வொருமுறை சேனல் மாற்றவும் 15 மாடிகள் ஏறி இறங்க என்னால் முடியவில்லை.. இதனால், அந்தக் கட்டிடத்தின் வாட்ச் மேனுடன் வேறு சண்டை வந்துவிட்டது..!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (7-Nov-16, 12:06 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 290

மேலே