சாகும் வரை உன்னோடு

மறந்திட சொல்லிடும் நீயும்
நினைத்திட சொல்லும் நானும்
இணைவது காதல் எண்ணத்தில்
பிரிவது புரிதலில் ...

வாய்ப்பு கொடுத்துப்பார்
உன்னை வாழ வைக்க அல்ல
சாகும் வரை உன்னோடு
காதலுடன் வாழ்ந்துகாட்ட

விலகிட யோசிக்கும் ஒரு நொடி
சேர்ந்திடவும் யோசி கண்ணே
என்றும் திரும்பாதது நேரமும்
உண்மைக்காதலும்தான் ........

எழுதியவர் : ருத்ரன் (7-Nov-16, 9:25 pm)
Tanglish : saagum varai unnodu
பார்வை : 346

மேலே