நார்மல் டெலிவரியா சிசேரியனா

ரேவதிக்கு குழந்தை பிறந்திருக்காமே ????
ஆமா லதா நேத்து தான் பிறந்தது பொண்ணு பிறந்திருக்கு ...
அப்டியா நார்மல் டெலிவரியா ??சிசேரியனா ???
சிசேரியன் தான் லதா பேசிக்கொண்டே தன் வேலையை பார்த்தபடி நகர்ந்தாள் அமுதா ..
லதா ரேவதியை பார்க்க சென்றிருந்தாள், குழந்தையை பார்த்து விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள் ஏண்டி நார்மல் டெலிவரிக்கு ட்ரை பன்னாங்களா சிசேரியன் பன்னிருக்காங்க ...
மெதுவாக ரேவதி எழுந்து உட்கார்ந்து இல்லடி லதா நாங்களா தான் சிசேரியன் பன்ன முடிவு செஞ்சுட்டோம் சின்ன வயசுல இருந்து ஊசினா கூட பயம் அதான் பயத்துல வேணாம் சொல்டேன்
ம்ம் கொஞ்சம் யோசித்து விட்டு லதா பேசினாள் இந்த காலத்துல தான் "சிசேரியனா சாதாரணமாகவும், நார்மல் டெலிவரிய ஆச்சர்யமாகவும் பார்கறோம் " பொதுவாவே பெண்ணுக்கு பிரசவம் வரம் அதுலயும் சுகப்பிரசவம் வலி நிறைஞ்ச சுகமான பயணம் , குழந்த முகத்த பாக்கும் போது வலியெல்லாம் காணாம போயிடும் , நமக்கு நார்மல் டெலிவரியா ??சிசேரியனானு நாம முடிவு பன்ன கூடாது மருத்துவர் தான் அத முடிவு பன்னனும் , குழந்த நல்ல நேரத்துல பிறக்கனுங்கறதுக்காக சிசேரியன் பன்னி நல்ல நேரத்துல சிசேரியன் பன்னிடறாங்க இது ரொம்ப ரொம்ப தவறு ....
அது மட்டுமில்லாம பொன்னுக டீன் ஏஐ்ல ஸ்லிம்மா இருக்கனுங்கறதுக்காக சுத்தமா சாப்டவே மாட்டீங்கறாங்க அப்புறம் ஸ்ரென்த் எதுவும் இல்லாம டெலிவரி அப்போ ரொம்ப வீக்கா இருக்காங்க , கன்சீவா இருக்கப்க கட்டாயம் சின்ன சின்ன வேலைகள செய்யனும் வீட்டை குமிந்து, நிமிர்ந்து பெருக்கறது, காலை மடக்கி (சம்மனங்கால்)உட்காரும்போது கருப்பையும் இடுப்பு எழும்பு விரிவு கொடுக்கும் சுகப்பிரசவம் அதுக்கு வழி கொடுக்கும் புரியுதா..,
இதை எல்லோம் ஆச்சர்யமா கேட்டுக் கொண்டிருந்த ரேவதி "எப்படி டீ லதா இதெல்லாம் தெரிஞ்சுகிட்ட"
வேறெங்க இனையதளத்துல தான் அதை பேஸ்புக், வாட்ஸ்அப்பிற்கு மட்டும் பயன்படுத்தாம இது போல நல்ல விசியத்துக்கு பயன்படுத்தலாம்டி சிரித்துக் கொன்டே சொன்னாள் லதா....

எழுதியவர் : க.நாகராணி (7-Nov-16, 9:38 pm)
சேர்த்தது : நாகராணி
பார்வை : 272

மேலே