எழுத்து நணபர் திரு KRஇராசேந்திரன் கவிக்கோ தமிழன்பன் விருதுபெற்றதற்கு பாராட்டி வாழ்த்து

எழுத்து நணபர் திரு. K.R..இராசேந்திரன் கவிக்கோ தமிழன்பன் விருது
பெற்றதற்கு பாராட்டி வாழ்த்து.
××××××××××××××××××××××××××××××××

அன்பால் இணைந்த நண்பனே 
அருமைத் தம்பியே தமிழ் 
ஆர்வலனே திரு.இராசேந்திரனே 
அருந் தமிழ்த் தொண்டனே ! 

பண்பு சால் தாளாண்மை 
பல்லுயிர் ஓம்பும் வேளாண்மை 
கருப்பொருளாய் விளங்கி 
உரு கொண்ட எண்ணங்கள் 

கற்கண்டு சொற் கொண்டு 
கற்பனை திறம் கொண்டு 
மலர்ந்த கவின்மிகு கவிதை 
மலர்களைத் தொடுத்தீர் கருத்துடன் 

தகமை சால் எழுத்து தளத்தில் 
தமிழ் அன்னை மகிழ அணிவித்தீர் 
கவிக்கோ தமிழன்பன் விருது பெற்றீர். 
கை கொட்டிப் பாராட்டுவேனே! 

எந்தை அறிஞர் அண்ணா சொன்னார் 
எதையும் தாங்கும் இதயம் கொண்டு 
வேதனை புரத்தை இனிதாய் தாண்டு 
சாதனை வெற்றிபுரி தானே முந்துறும். 

நீ தாண்டிய வேதனைப் புரங்கள் 
நீளம் தாண்டும் ஓட்டப் பந்தயங்கள் 
இடை இடையே உயரம் தாண்டும் 
இடை உடையும் தடை இருக்கும்! 

நீளிடை கண்டு இடைந்து ஒதுங்காது 
நீ இடைந்து இடைந்து உரு மெலியாது 
நீளிடை கடந்து தேன் இடை அடைய 
நீள நினைந்து உழைத்தாய் நித்தமும்! 

எட்டி வைக்கும் ஒவ்வொரு அடியும் 
தட்டுத் தடுமாறாத திடமான நெஞ்சுரம் 
கட்டிக் காக்கும் தன்னம்பிக்கை 
கொட்டி மகிழ்ந்த ஓயாத உழைப்பு ! 

வேதனையை வெட்டித் தள்ளி 
சோதனையை நெட்டித் தள்ளி 
சாதனைக் கனியை எட்டிப் பிடித்தீர் 
சால்பு சால் விருதை தட்டிப் பறித்தீர்.! 

மண்ணில் விதை போடுவதற்கு முன்- 
உன்னில் அதைப் போட்டு உருவாக்கி 
கண்ணில் அமை கருவிழியாய் காக்க 
தன்னில் அது தழைக்கும் தல விருட்சம் ! 


சிட்டுக் குருவிகள் வயல் இடையே 
சின்னக் கூடுகள் கட்டும் மரங்களிலே 
மெல்லிசைக் குரலில் கூடிப் பாடும் 
நெல் அறுவடை நாளைத் தேடும் 

குவித்து விட்டாய் சிறப்பான விருது 
குன்றொக்கும் களஞ்சியம் - நானும் 
குருவிகளோடு இணைந்து விட்டேன் 
கருத்துடனே பாராட்டி மகிழ்வுறவே.!! 

மேன்மேலும் விருதுகள் பல பெற்று 
மேன்மை தரும் புகழால் சிறப்படைய 
நண்ணுவ எல்லாம் நலமுற்றே 
நாளும் நலமாய் வாழியவே! . . 

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (8-Nov-16, 7:13 pm)
பார்வை : 87

மேலே