ஒரு பக்கக் காதல் கதை பாகம் -11
அந்த நாள் முழுவதுமாய் அவள்பின் அலைந்து மாலை வெயிலில் அவள் நிழலுமாய் ஆனான்...
அவன்: ஏழு நாட்கள்ல ஒருநாள் இனிதே சுபம் போட்டு முடிச்சாச்சு, என்ன பத்தி நல்ல புரிஞ்சுருப்ப ..
அவள்: உன்ன புரிஞ்சுக்க ஒண்ணும் நா இங்க வரசொல்லல..என்னுடைய ஒருநாள் இப்படித்தான் இருக்கும்..இதான் நான் ..இதுக்குதான் உன்ன வரச்சொன்னேன்
அவன்: நீ இதான்னு உன்ன பாதப்பவே எனக்கு தெரியும், அதுக்காக மட்டும் நா வரல, எனக்கும் நெறய வேல இருக்கு..பையனுக்கு நெறைய வேல இருக்கலாம் பொண்ணுக்கு அப்டி என்ன பெருசா வேல இருந்துற போகுதுன்னு பாகத்தான் ..
அவள்: எங்களுக்கு கனவெல்லாம் என்ன 10 புள்ள பெத்து தாயாகி குடும்பத்த பாத்து பேரன் பேத்திக்கு பணிவிடை செஞ்சு, எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்க எங்களோட உடல், உள்ளம் எல்லாத்தையும் மிச்ச மீதிய எரிச்சு சாம்பலானாலும் " மகராசி சுமங்கலியா போயிட்டா " ன்னு எல்லாரும் பேசணும்ன்னு நெனச்சுகிட்டே வாழுற இயந்திர பட்டியல்ல என்ன சேர்த்துடாத..இதைத்தாண்டி எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு, கனவு இருக்கு..நீ புல்லா இருந்தாலும் கல்லா இருந்தாலும் எனக்கு பாரமா இருக்க விடமாட்டேன்
அவன்: மொத்தத்துல ஆம்பள மாதிரி வாழனும் அதான ?
அவள்: அதென்ன நீங்க ஒரு எடுத்துக்காட்டா?..எங்களுக்கும் தனித்துவம் இருக்கு அதெல்லாம் உங்களுக்காக விட்டுக்கொடுத்திருக்கோம்..அவ்ளோ தான்
அவன்: இதுக்காக நீங்க நெறைய இழக்க வேண்டிவரும், பெண்கள் அதுக்கெல்லாம் தயாரா இருக்கவேமுடியாது..உங்களால காதலிச்ச பையனையும், பைய்யனுக்காக பெத்தவங்களையும் தான் இழக்கமுடியுமே தவிர ..உங்களோட கனவுக்காக ஒரு மயிர கூட இழக்கமுடியாது
அவள்: கோவத்தில் பட்டென வீட்டிற்குள் சென்று கண்ணாடி முன் நின்று..கத்திரியை கையிலெடுத்தாள்
அவன்: எதிரிலிருக்கும் பூவினை கண்டு இனி உனக்கு என்னவளை தொடும் அனுமதியில்லையென கூறுவது போல் புன்னகை உதிர்த்து சென்றான்
அவன் சென்றபின் சோகத்தில் அந்த பூ ..!