மௌனம்

முன்னுரை: { கண், வாய்; காது இவை மூன்றும் செயலிலந்து போனால் மனிதனுக்கு வாழ்வு சூனியமாகி விடுகிறது. தீயவையைப் பார்காதது, பேசாதது, கேளாதது விவேகமானது என்று கண், வாய் காதுக்கு கட்டப்பாடுண்டு. இதனை ஜப்பானியர் எடுத்தியம்பினார்கள். அதையே காந்தியடிகளும் மூன்று குரங்குகள் கண். காது . வாய் ஆகிய மூன்றையும் கையால் மறைப்பது போல்காட்டி மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என எடுத்துக் காட்டியுள்ளார் . குருடு, ஊமை, செவிடு, எனச் சுருக்கமாகச் சொல்லி அழப்பது வழக்கம். பேசமுடியாதவர்களில் பிரபல்யமானவர்கள் பலர் . விஞ்ஞானி, .இசைமேதை, விளையாட்டு வீரர், கலைஞர், எழுத்தாளர் போன்றவர்கள், ஊமைகள். தோமஸ் அல்வா எடிசன், வான் பெத்தோவனன் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இந்த கதை ஒரு ஊமையாகக் பிறந்த ஒருவனது மணவாழ்க்கை பற்றியது.}

தங்கராசு – தங்கம்மா தம்பதிகளுக்குத் திருமணமாகி பத்து வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை. தங்கமான மனசு அவர்களுக்கு. அவர்கள் போகாத வைத்தியர்கள் இல்லை. போய் தரிசித்து வராத கோயில்கள் இல்லை. பிள்ளை வேண்டி சுற்றி வந்த மரங்கள் பலர். தாங்கள் முற்பிறவியில் செய்த கர்ம வினையொ தெரியாது என்று சொல்லிக் கொள்வார்கள். பல சொத்துக்கு உரிமையாளர்களாகவும், தேவையான செல்வம்; இருந்தும் தமக்கு வாரிசாகப் பிள்ளை பிறக்காத குறை அவர்களை வாட்டியது. தங்களுக்கு புண்ணியம் கிட்டட’டும் என்ற நோக்கில் வளம் குறைந்த பிள்ளைகளைக் கவனிக்கும் இல்லங்கள் செயல்பட அவர்கள் உதவிகள் பல செய்தார்கள். தங்கராசு தம்பதிகள் இருக்காத விரதங்கள் இல்லை. கடவுள் தங்களுக்கு குறை இல்லாத குழந்தை ஒன்றையாவது கொடுக்காதா என்று வேண்டினர். அவர்களது வேண்டுகோள் ஒரு நாள் பலித்தது.

அழகிய ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள் தங்கம்மா. அவள் குழந்தையை ஈன்று எடுக்கும் போது அவளுக்கு வயது நாற்பது. பிறந்த போது அம்மா என்றுவாய்விட்டு குழந்தை அழவில்லை. அது அவர்களுக்கு விசனத்தைக் கொடுத்தது. அழகிய வாய்இ கண்கள். காதுகள் இருந்தும் பிறந்த குழத்தைக்கு வாய்விட்டு பேச முடியவில்லை . குழந்தையின் குரல் கேட்காதது, தங்கராசு தம்பதிகளுக்கு ஏமாற்றமாயிருந்து. டாக்டரிடம் குழந்தைiயின் ஊமைத்தனத்தைப் போக்க வைத்தியம் கிடையாதா? நாம் எவ்வளவு பணமும் செலவு செய்யத் தயார் என்றார் தங்கராசு.

டாக்டர் சிரிதத்படி, ” நீங்கள் செய்த புண்ணியம், பார்ப்பபதற்கு ஒரு அழகான குழந்தை பிறந்திருக்கிறது. பேசமுடியாத குழந்தைக்கு பார்ப்பது, காது கேட்பது ஆகியவற்றில் குறைவில்லை. உங்களது மரபணுவில் ஏதோ குறையுன்டு. உங்களின் இனத்தவர்களில் யாராவது; ஊமையாக வாழ்ந்திருக்கிறார்களா?, டாக்டரின் கேள்வி அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“ எனது பூட்டனார் ஊமையாக பிறந்தவர். ஊர் சனங்களின் ஏளனம் தாங்க முடியாமல் தற்கொலை புரிந்து கொண்டார். அவரின் மறுபிறவியோ இந்தக் குழந்தை என்று ஒரு கணம் நான் யோசிக்கிறன்,இ என்றாள் தங்கம்மா.

“ விசர் கதை கதைக்காதே மயூரன் சாதனைகள் படைக்க, பேசவேண்டும் என்பது அவசியமில்லை. அவனுக்கு வாழ்வதற்கு தேவையான சொத்து இருக்கிறது. அவன் பேசாது இருந்தால் தியானம் செய்வதுக்கு அது ஏற்றது. அன்மீகவாதிகள் அதிகம் பேசுவது கடையாது பேசுவதினால் தேவையில்லாத வதந்திகளைப் பரப்ப உதவும். மௌனம் என்பதுவும் ஒருவகையான யோகப் பயிற்சி இந்தப் பயிற்சி கைவந்தவர்களுக்கு முத்தியும் கைகூடும். அதனால்தானோ என்னவோ மகான்களும், ஞானிகளும் சித்தர்களும் மௌனத்தையே தமது மொழியாகத் கொண்டிருப்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர் தான் மௌனகுரு என்று அழைக்கப்பட்ட தவத்திரு முத்துச்சாமி சுவாமிகள்.“ என்றார் தங்கராசா.

“பொறுமையாக இருங்கள். காலப் போக்கில் ஊமைத் தன்மையை நீக்க வெளிநாட்டில் வைத்தியம் கண்டுபிடிப்பார்கள் “ என்றார் டாக்டர்.
தனது சிரிப்பாலும் பார்வையாலும் பலரை மயக்கினான் குழந்தை. அழகனாக பிறந்த அவனுக்கு மயூரன் என்ற பெயர் வைத்தனர். மயூரன் முருகனைக் குறிக்கும். முருகன் அழகன்.

“மயூரனுக்கு பேசமுடியாவிட்டாலும் நல்ல பார்வையுண்டு. நன்றாக காது கேட்கிறது. நீங்கள் சொல்வது அவருக்கு நன்றாகப் புரிகிறது. மயூரன் வளர்ந்தால் சைகை மொழி கற்று மற்றுவர்களோடு தொடர்புகொள்ளலாம். அந்த மொழி மேல் நாடுகளில் பலர் பாவிப்பதுண்டு. உங்கNளோடு தொடர்பு கொள்ள சைகை மொழியை அவன் ;பாவிக்கலாம். குமரி கண்டம் இருந்தகாலத்தில் வாழ்ந்த மக்கள் பாவித்தது, சைகை மொழி என்று ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். குழந்தைக்கு இறைவன் பேசமுடியாத குறையை வைத்தாலும் புத்தி கூர்மையுள்ள ஜீவனாக படைத்திருக்கிறார்” என்றார் டாக்டர்.

மயூரனுக்கு அபார ஞாபகசக்தியுண்டு. தன்னைச் சுற்றி நடப்பதை கூர்மையாக அவதானிப்பான். எழுதும் திறமை அவனைத் தேடிவந்தது. தன்னில் உள்ள குறையைச் சிந்திக்காமல் இருப்பதற்காக எழுதத் தொடங்கினான். உள்ளத்தில் உள்ள உணரச்சிகளையும் சிந்தனை களையும் தன் எழுத்தின் மூலம் காட்டினான். அவன் எழுதிய சிறுகதைகள் பிரபல்யமானது.


தங்கராசு தம்பதிளின் துரத்து உறவினர்களான இராமையா தம்பதிகள் பணவசதி இல்லாதவர்கள். அப்படி இருந்தும் தங்கள் பணக் கஷ்டத்தில் தங்களின் ஒரே மகள் துர்காவை படிப்பித்து பட்டதாரியாக்கினார்கள். துர்கா பேரழகி இல்லாவிட்டாலும் திறமையான பேச்சாளி. பட்டிமன்றங்களில் அவள் பேசுவதைக் கேட்க பலர்கூடுவார்கள். வாதத்தில் பலரை வென்றவள். அரசியல் கூட்டங்களில் அவளை பேச அரசியல்வாதிகள் அழைப்பார்கள். அவள் பெசும் போது அவளது குரல், வாதத்தால் கவரப்பட்டு கைதட்டல்களுக்கு குறைவில்லை.

துர்காவுக்கு முன் கோபம் தான என்ற அகங்காரமும் அதிகம். பல இடங்களில் துர்காவுக்கு பெண் பேசிவந்து, பெண்பார்த்து பேசிய பினன் வந்த வரன்கள் “பெண்பிடிக்கவில்லை என்று சென்றதன் காரணம் அவளது அகங்காரத் தொனி நிறைந்த பேச்சு.

தாங்கள் இல்லாத காலத்தில் மயூரன் கஷ்டப் படப்போகிறான் என நினைத்த தங்கராசு தம்பதிகள் துர்காவை மருமகளாக்க இராiயாவிடம் பெண் கேட்டு போனார்கள். செல்வம் படைத்த குடும்பத்தில் தன் மகளை மருமகளாக கொடுக்க இராமையாவுககு முழு சம்மதம். துர்காவுக் குடும்ப வாழக்கையில் அவளோடு தரக்கம் புரியாத ஒருவனே மயூரன் என்பது அவர்கள் முடிவு. எதை யார் எதை பேசினாலும் அமைதியாக சிரித்தபடி எழுதிக் கொண்டிருப்பான். அவனே துர்காவுக்கு பொருத்தமான மாப்பிள்ளை என இராமையா தம்பதிகள் முடிவெடுத்து, துர்காவை மயூரனுக்கு மணம் முடித்து வைக்க சம்மதம் தெரிவித்தனர்.

******
திருமணமாகி சில நாட்களுக்குள் தன் சுய ரூபத்தை துர்கா காட்டத் தொடங்கினாள். எப்போதும் மயூரன் அமைதியாக எழுதிக் கொண்டிருப்பது அவளுக்கு கோபத்தை கொடுத்தது. தன்னை வெளியே உலாவ அழைத்துச் செல்லாது அறைக்குள் மயூரன் பேனவும் கையுமாக இருப்பது, ஏன் தன்னை தன் பெற்றோர் மயூரனுக்கு திருமணம் செயது வைத்தாரகள் என்ற ஆத்திரம் அவளுக்கு வந்தது. எவ்வளவு பண வசதி இருந்தும் தன்னோடு இனிமையாக பேசி உறவாட முடியாத ஒருவனை கணவனாக கிடைத்தது, அவளுக்கு அவன் மேல் வெறுப்பை உண்டு பண்ணியது. சில சமையங்களில் அவன் எழுதிய கதைகளை கோபத்தில் கிழித்தெறிந்து திட்டுவாள். பத்திரகாளியாவாள். அவன் பேசாது சிரித்தபடி இருப்பான்.

“உங்களுக்கு நான் திட்டுவதால் கோபம் வருவதில்லையா? உணர்ச்சிகள் அற்ற பிண்டமாக இருக்குறியளே” என்று கணவன் என்ற கூட பாராமல் பல தடவை திட்டித்தீரப்;பாள்.

துர்கா இப்படிபட்ட அகங்காரக்காரி என்று தெரிந்திருந்தால் தங்களின் அமைதியான மகனுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்து பெரும் தவறை இழைத்துவிட்டோம் என்பதை தங்கராசு தம்பதிகள் உணர்ந்தனர். நல்ல நேரம் அவனுக்கு அவளோடு வாதாடி எதிர்த்துப் பேசும் சக்தியை கடவுள் கொடுத்து வைக்வில்லை.

“அவன் தன் கவலைகளை எழுத்தின் மூலம் தீர்த்துக்கொள்கிறான் என்றாள் தங்கம்மா.

தங்கராசு, இராமையா தம்பதிகளின் மறைவுக்கு பின் துர்காவின் அகங்காரப்போக்கு அதிகரித்தது. எதற்கு எடுத்தாலும் கணவன் மேல் எரிநது விழுவாள். கணவனுக்க கைநீட்டி அடிக்காதது ஒன்று மட்டுமே. நேரத்துக்கு உணவு கொடுக்கமாட்டாள். அவனோடு தாம்பதிய உறவை தவிர்த்தாள். தனக்கு குழந்தை இல்லாதது அவளுக்கு மண வாழ்க்கையில் வெறுப்பைக் கூட்டியது. தனக்குத் தெரிந்த வழக்கறிஞரிடம் கணவனை விவாகரத்து செய்வதை பற்றி கலந்து ஆலோசித்தாள்.

“துர்கா உன் கணவன் ஒரு ஊமையானாலும் நல்ல மனம் படைத்தவர். நீ எவ்வளவு பேசினாலும்; எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு வாழ்கிறார். அவர் உன்னை ஒரு நாளாவது அடித்துத் துன்புறுத்தியது உண்டா”?

“ கிடையாது. அவர் ஒரு வாயில்லாப் பூச்சி”, பதில் சொன்னாள் துர்கா

“ அப்போ எந்த காரணத்தைக் கொண்டு விவாகரத்து கேட்கிறாய்”?

“அவர் ஒரு பேசமுடியாத ஜடம். நான் எவ்வளவு திட்டினாலும் சிரித்தபடி என்னை அலட்சியம் செய்து, எழுதிக்கொண்டிருப்பார். அவரோடு நான் எப்படி வாழமுடியம்”? துர்கா வழக்கறிஞருக்கு தான் விவாகரத்து கேட்பதற்கு காரணம் சொன்னாள்.

வழக்கறிஞர் சிரித்தார். “ துர்கா உன் கணவன் பிறப்பால் ஊமை என்று தெரிந்திருந்தும் பணத்துக்காகத் தானே அவரை திருமணம் செய்தனீ? கிட்டத்தட்ட ஐந்து வருட குடும்ப வாழ்க்கையை பொறுமையொடு ஒரு சொல்லாவது எதிர்த்துப் பேசாமல் உன்னோடு நடத்தி வந்திருக்கிறார். எவ்வளவு பொறுமைசாலி என்பதை பார்த்தாயா? எப்போதாவது நீ இதை சிந்தித்துண்டா. தனக்கு இருக்கும் குறையை வெளிக்காட்டாமல் பொறுமையாக இருந்து எழுத, பிரபல்யமான எழுத்தளராகிவிட்டார். அவரின் “ பேசாதவன்” என்ற நாவலுக்கு அரசின் சாகித்திய மண்டல முதலாம் பரிசு கிடைத்திருக்கிறது. அது உனக்குப் பெருமையை தரவேண்டும். இனி அவரை வையாதே. அமைதியாக வாழ்க்கை நடத்தப் பார்” என்று வழக்கறிஞர் அறிவுரை வழங்கினார்.

சற்று நேரம் பேசாது சிந்தித்தபடி இருந்த துர்கா, அவருக்குப் பதில் சொல்லாமல் எழுந்து சென்றாள்.

********

மாதங்கள் பல உருண்டோடின. துர்காவின் போக்கில் படிப்படியாக மாற்றம் ஏற்பட்டது. மயூரானோடு அன்பாகப் பேசத்தொடங்கினாள். கோபத்தை தனித்துக் கொண்ட்hள். அவன் அமைதியாக எழுதிக் கொண்டிருக்கும் போது கோப்பி கலந்து கொண்டுவந்து கொடுப்பாள். அவன் விரும்பிய உணவை தயாரித்துக் கொடுப்பாள்.அவளோடு தேவையில்லாமல் பேசுவதைக் குறைத்துக் கோண்டாள். அவளில் ஏற்பட்ட மாற்றத்தை மயூரன் அமைதியாக அவதானித்தான்.

அன்று கையில் ஒரு பார்சலோடு மயூரன் வந்தது துர்காவுக்கு அதிசயமாக இருந்தது.

“என்ன பார்சல் இது. என்றும் இல்லாதவாறு”? துர்கா அன்பாக அவனைக் கேட்டாள்.

“ திறந்து பார்” என்று சைகை மொழி மூலம் அவளுக்கு மயூரன் பதில் சொன்னான.;

துர்கா பார்சலைத் திறந்து பார்த்தபோது விலை உயரந்த பச்சை நிறக் காஞ்சிபுர பட்டுச் சேலை அவளைப் பார்த்து சிரித்தது. அவளால் நம்பமுடியவில்லை. அதுவும் தனக்குப் பிடித்த நிறச் சேலை.

“ எங்காலை உங்களுக்கு இவ்வளவு பணம்“? துர்கா கேட்டாள்.

“தான் வைத்திருந்த “பேசாதவன்” நாவலை காட்டி சைகை மொழி மூலம் தான் எழுதிய நூலுக்கு அரசின் சாகித்திய மண்டலப் பரிசில் கிடைத்த பணம்” என்று விளக்கம் கொடுத்தான் மயூரன்.

துர்காவுக்கு தனக்குள் வந்த அழுகையை அடக்க முடியவில்லை. மறு நிமிடம்; அவனை இறுக்க அணைத்து மயூரன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். இரு மனங்களும் பேசிக்கொண்டன.

*******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் - கனடா) (10-Nov-16, 8:18 pm)
Tanglish : mounam
பார்வை : 420

மேலே