விடாது கருப்பு

மார்வாடிகள் எல்லாத்திலேயும் பொதுவா Planned ஆ‍ செயல்படுவாங்க. சில நேரங்கள்ல ரொம்ப கிரிமினலா யோசிக்கறதுலே அவங்க நம்மாளுங்களை விட கெட்டிக்காரங்க. ஆனா எந்த குற்றச்செயல் செய்தாலும் நாசூக்கா செய்யறதுல அவங்க கில்லாடிங்க.

எனக்கு தெரிஞ்ச மார்வாடி.ஒருத்தர் வெஹிக்கள்களுக்கு பைனான்ஸ் கொடுக்கிற பிசினஸ் பண்றாரு. கோடிக் கணக்கில முதலீடு பண்ணி இருக்காரு. வண்டிகள் புதுசு பழசு வாங்கி விக்கும்போதும் அதுக்கும் ஃபைனான்ஸ் கொடுக்கறவரு.. அவரை ‍நேத்து நான் வழக்கமா காஃபி குடிக்கற ஹோட்டல்ல பார்த்தேன்.

நான் மெதுவா அவர்கிட்ட கேட்டேன்.. கணக்கில் கொண்டுபோறது போக கணக்கே காட்டாம பல கோடி களை டிரான்ஸ்ஷாக்ஷன் பண்ணிகிட்டு இருந்தீங்களே. இப்போ உங்ககிட்ட லிக்வூட் கேஷ் நிறைய இருக்குமே.. அதை எல்லாம் எப்படி கணக்குல கொண்டுவரப்போறீங் கன்னேன்.. அவர் ரொம்ப கூலா சொன்னார். எங்களுக்கு அதெல்லாம் ஒருபிரச்சனையே இல்லே. மோடிஜி அறிவிச்ச அன்னைக்கு எங்காளுங்க அந்த பணத்தை எல்லாம் எப்படி வொய்ட்டா மாத்தனுக்கிற டெக்னிக்கை சொல்லிட்டாங்க. நான் கொண்டுபோய் வங்கியில டெபாசிட் பண்ணணும்கிறது அவசியம் இல்ல..

ஆனா என்ன ஒண்ணு, ஒரு கோடி ரூபாய்க்கு 7 இலட்சம் கமிஷன் கேக்கிறாங்க. நாங்க மத்த ஆளுங்களை நம்பி எல்லாம் பணத்தை ‍கொடுக்கமாட்டோம். எங்காளுங்க்குள்ள இந்த பரிமாற்றம் எல்லாம நம்பகத்ததோ நடக்கும்.. இந்த 7 இலட்சம் கமிஷன் அதிகம்ன்னு பேரம்பேசிகிட்டு இருக்கோம். 5 பர்சென்ட்டுக்கு பேசிகிட்டு இருக்காங்க.. சரியாகிடும். அதான் இன்னும் 50 நாள்கிட்ட இருக்கேன்னார்..

சரி இப்படி நீங்க கணக்கில் வராத பணத்தை கொடுத்து வொய்ட்டா மாத்தறீங்க. மறுபடியும் அது அரசாங்கத்தை பொறுத்தவரை அது ப்ளாக்தானே என்றேன். எப்படி என்றேன்.. ஒண்ணுமில்ல அந்தப்பணம் 80G ங்கிற லூப்ஹோல் வழியா மாத்திடலாம்னு சொல்லி இருக்காங்க. ஆனா இவ்வளவு கோடிகளை எப்படி மாத்தமுடியும்ன்னு ‍கேட்டதுக்கு எனக்கே அந்த இரகசியம் என்னென்னு சொல்லலை. சரி நமக்கெதுக்கு இந்த வம்பெல்லாம் ஒருகோடிக்கு அதிகபட்சம் 7 இலட்சம் தானே போனா போகட்டும்னு சைலன்ட்டா நானும் கண்டுக்காம விட்‍டுட்டேன்.. அப்படீன்னா நீங்க உங்க வீட்ல இருக்கிற பணத்தை பேங்க்ல டெபாசிட் பண்ணமாட்டீங்க அப்படித்தானே என்றேன்.

நீங்க வேற ஜி. காமடி எல்லாம் பண்ணிகிட்டு இருக்கீங் கன்னார்.. சரி சரி நான் கிளம்பறேன். என்வாயிலிருந்து வார்த்தைகளை கொண்டுவர முயற்சிப்பண்றமாதிரி இருக்குன்னு விர்ரென போய்விட்டார். அரைமணிநேரம் கழிச்சு ஃபோன்ல ஜீ இந்த மேட்டர் நமக்குள்ளயே இருக்கட்டும்கிறார்..

என்னதான் தலைகீழா நின்னு தண்ணிகுடிச்சாலும் இதுபோன்ற ஆட்களும் சட்டத்தில், விதிமுறைகளில் லூப்ஹோல்கள் இருக்கும் வரை கருப்புப்பணம் வெள்ளையாக மாறவோ அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெற வேண்டிய வரிகளோ கிடைக்கப்போறது இல்ல..

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (11-Nov-16, 10:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 256

மேலே