ஏமாற்றம் - சகி

வாழ்க்கை

ஒவ்வொருநாளும்
உன்னிடம் என் காதல்
தோற்றுக்கொண்டே இருக்கிறது ....

வேசமென்று சொல்கிறாய்
உன்மீதுக்கொண்ட காதலை ...

வார்த்தைகளை விசிறிவிட்டு
செல்கிறாய் முட்களாய் ....

உன்காதலுக்காக ஏங்கும்
என் காதலின் வலியை
என்றுமே உணரப்போவதில்லை ...

என்வாழ்நாளின் ஒவ்வொரு நாளும்
புதிய புதிய வலிகளையும்
வார்த்தையின் வலிகளையும்
தந்துசெல்கிறாய் ....

எனக்கான என்னவன் நீ
மட்டுமே என எண்ணினேன் ....

அவசியமில்லை தேவையில்லை
என்ற உன் வார்த்தைகளில் உணர்கிறேன் ....

உன் ஆழ்மனதில்
நிச்சயம் நானும் என்காதலும்
இல்லை என்பதை ....

இல்லாத உன்காதலை
இந்நொடி வரை நிஜமென
எண்ணியே துடிக்கிறது
இவள் இதயம் .....

உன்வார்த்தைகளில் தான்
என்மரணம் என்பதை
மட்டும் மறக்காதே ...

கிறுக்கப்படும் என்வரிகள்
என்னிதயத்தின் மரணம் .....

எழுதியவர் : சகிமுதல்பூ (12-Nov-16, 3:33 pm)
பார்வை : 2503

மேலே