வழி தவறிய பயணங்கள்

இயற்கைகளை மறுக்கின்றோம் !
இன்னல்களை புரிகின்றோம் !
இதிகாசம் படைப்பதாக ;
இறுமாப்பில் அலைகின்றோம் !

நடக்கும் அரசியலில் -
நாகரிகம் இல்லாது ;
வசதிகளை பெருக்கியே -
வாழ்க்கையும் மாற்றலாம் !

கருப்பு பணம் அத்தனையும் ;
கட்டுக்கட்டா பதுக்கிருந்தும் ;
பகலெல்லாம் இரவு ஆச்சி !
பாதை கூட மாறி போச்சி !

பாதையே மாறினாலும் -
பகுத்தறிவும் வேலை செய்ய ;
பதுக்கி வைத்த பணம்கூட -
பதறத்தான் செய்கிறது !

சேர்த்து வைத்த நோட்டு கூட -
செல்லாமல் போனதே !
அடுக்கி வைத்த ஆயிரமும் -
அல்லோல படுகுதே !

பயண திட்டம் அத்தனையும் -
பாழாகி போனதே !
வழி தவறி வந்த பணமும் -
வாழ்க்கையை மாற்றுதே !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (12-Nov-16, 6:35 pm)
பார்வை : 125

மேலே