தனியழகு

அன்புள்ள உறவுகள் தனியழகு
ஆழிக்கு அலைகள் தனியழகு
கனிவுடன் கண்ணியம் கடமையுமே
மனிதர்க்குத் தந்திடும் தனியழகு

மலர்களில் பனித்துளி தனியழகு
மாலையில் பலவண்ணம் தனியழகு
தீபத்தின் வடிவினில் ஒளிகொடுக்கும்
தீக்கதிர் தந்திடும் தனியழகு

மின்னிடும் விண்மீன் தனியழகு
மின்னலின் கோடுகள் தனியழகு
சுற்றிடும் பூமியில் நாள்தோறும்
சுடுகதிர் உதிப்பது தனியழகு

தவழ்ந்திடும் மழலை தனியழகு
தங்கத்தின் நிறமும் தனியழகு
தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும்
தடாகம் கண்ணுக்குத் தனியழகு

வெண்ணிறம் நிலவுக்கு தனியழகு
பெண்மைக்கு அடக்கம் தனியழகு
மாதவம் செய்து பிறப்பெடுக்கும்
மங்கைக்கு தாய்மைத் தனியழகு

கலைகளில் ஓவியம் தனியழகு
மலைதனில் அருவிகள் தனியழகு
உயிருள்ள வரையினில் தன்கையால்
உழைத்து உண்பது தனியழகு .

பாஸ்கரன்

எழுதியவர் : சோ . பாஸ்கரன் (13-Nov-16, 7:36 pm)
பார்வை : 58

மேலே