ஈ உபத்திரம்

கொசுக்கடிகளைத்தாங்கிக்கொண்டு
தூங்கியிருக்கிறோம்,
இன்றோ
இந்த ஈ உபத்திரம்
எங்களால் தாங்க முடியவில்லை.

வரிசையில் நிற்பது
எங்களுக்கு புதிதில்லை தான்.
இருந்தாலும்
வெறுமையுடன் வரிசையில் நிற்பது
எங்களுக்கு வேதனையையே தருகிறது.

"கால்களை
தரித்துக் கொள்ளுங்கள்
சோடுகள் மாற்றமுடியாது!"
என்பது போல
பொறுமையுடன் இருங்கள்
என்றால்
நாங்கள் ஏன் இருக்க வேண்டும் என்று கேட்டால்
எரிச்சல் வரலாம்
எங்கள் நிலைமை
அதனால் தான் அந்தக்கேள்வி.

ஒரு நாடு முன்னேறுகிறது என்பதை
அந்த நாட்டில் ஈ உபத்திரம் இல்லை
என்பதில் புரிந்து கொள்ளலாம்,

கொசுத்தொல்லையை
தாங்கிக்கொள்ளலாம்,
ஈ தொல்லையை
எங்களால் முடியாது,
இத்தொல்லையையும் தான்.

வங்கி முன் தினம் தினம் வரிசையில் நிற்பதை,
பணம் கிடைக்கும் வரை
செலவுக்கு
கணக்கில் இருந்தும் .

எழுதியவர் : செல்வமணி (13-Nov-16, 8:11 pm)
பார்வை : 119

மேலே