வெள்ளாவி

சொல்லாக்காசு
செல்லாக்காசாகியது,
உள்ளக்காசெல்லாம்
உதவாக்காசாகி
ஒவ்வொரு காசுமின்று
கக்கத்தில கவ்விக்கொள்ள
வெள்ளைசொள்ளையாய்
வந்தவனெல்லாம்
கன்னங்கருப்பாய் காட்சி தர
சொல்ல வந்தவன் மென்று முழுங்குகிறான்
மென்று முழுங்குபவன் கண்ணில் கசிகிறான்
கனத்த இதயத்துடன்
கால் கடுக்க நிற்பவரெல்லாம்
இளிக்கும் வாய்களைக்கண்டு
எரிந்து தகிக்கிறான்,

கருப்பு அழகாய் இருந்தது அன்று
இருப்பு அழுக்காய் தெரிகிறது இன்று
வெளுக்க இன்னும் போதவில்லை
வெள்ளாவி வைப்பவருக்கு இனி வேலையேயில்லை.

எழுதியவர் : செல்வமணி (14-Nov-16, 9:52 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 164

மேலே